24 special

தமிழக அரசியல் களமே பாஜகவை நோக்கி திரும்பி உள்ளது

Amitsha,pm modi
Amitsha,pm modi

உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேற்றைய தினம் இரவு சென்னை வந்த நிலையில் இன்று காலை முதல் பாஜக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை 10 மணிக்கு கிண்டி நட்சத்திர விடுதியில் உள்ள அமித்ஷாவை சந்தித்தார்.


அப்போது நேற்றைய சேலம் பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் ஆட்சி குறித்தும் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.மேலும் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை நாளை வேலூரில் நடக்கும் பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சரை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த நல திட்டங்கள் குறித்து பேசவும் இரண்டு முக்கியமான பைல் ஒன்றையும் உள்துறை அமைச்சரிடம் கொடுத்து இருக்கிறாராம்.

அதில் dmk files இரண்டில் இடம்பெறவுள்ள நபர்கள் குறித்த  விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை தவிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்தித்த அரசியல் சாராத பிரபலங்கள் சில கோரிக்கை மற்றும் ஆலோசனைகளை உள்துறை அமைச்சரிடம் முன்வைத்து இருக்கிறார்களாம் அவை குறித்து பரிசீலனை செய்யவும் உள்துறை அமைச்சர் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவு போட்டு இருக்கிறாராம்.

இவை ஒருபுறம் என்றால் இன்றைய தினம் வேலூரில் நடைபெறும் பாஜக பொது கூட்டத்தில் அமிட்ஷா பேச கூடிய ஒவ்வொரு வார்த்தையும் முதல்வர் ஸ்டாலினின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் ஆவினில் குழைந்தை தொழிலாளர்கள் பணிபுரியவில்லை என்று கூறியிருந்த நிலையில் நேற்றைய தினம் ஆவினில் பணியில் இருந்த மாணவர்களே நாங்கள் கூலி வேலை பார்த்தோம் என விளக்கம் கொடுத்தனர். இந்த நிலையில் இது குறித்து வேலூர் பொது கூட்டத்தில் பாஜகவினர் பேசலாம் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.

அமிட்ஷா தமிழகம் வருவதால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை என நேற்று பேசிவந்த திமுகவினர் இன்று முழுவதும் அமிட்ஷா வருகை குறித்தும், அமிட்ஷாவை சந்தித்த சினிமா பிரபலங்களை விமர்சனம் செய்வதிலே நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.

அமிட்ஷா வருகை தந்த மறுநாளே தமிழக அரசியல் களம் பாஜகவை நோக்கி திரும்பி இருப்பதுடன் வேலூரில் நடத்தி இருக்கும் பொது கூட்டம் மூலம் வேலூரில் பாஜக சார்பில் AC சண்முகம் போட்யியிடுவது உறுதி என அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறதாம் பாஜக.