மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேற்று சென்னை வந்த நிலையில் சினிமா பிரபலங்கள் தொடங்கி தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரையும் சந்தித்தார் அதன் பிறகு காலை பாஜக நிர்வாகிகளுடன் தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூட்டணி குறித்தும் மாநிலத்தில் கட்சியை வளர்க்க எடுக்கப்பட்ட நபடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார் இதில் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு இடையே தமிழக ஆளுநரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அமிட்ஷா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அரசு நிகழ்ச்சி சார்பாக அமித்ஷா தமிழகம் வராத காரணத்தால் அமித்ஷாவை ஆளுநர் நேரில் சந்தித்து பேசவில்லை என்று கூறப்படுகிறது.
அமித்ஷா விடம் தொலைபேசி மூலம் பேசிய ஆளுநர் தமிழகத்தில் பல்கலைக்கழங்களில் புதிய கல்வி கொள்கையை மாநில அரசு அமல்படுத்துவதை தடுப்பதாகவும், குறிப்பாக மாநிலத்தில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் முறைப்படி நடக்கவில்லை எனவும் அரசிற்கு வரக்கூடிய வருமானம் தனி நபர்களுக்கு செல்வதாகவும், இதன் மூலம் தேர்தலில் வாக்கிற்கு பணம் கொடுப்பது தொடங்கி பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேரி வருவதாக ஆளுநர் கூறி இருக்கிறாராம்.
இவை அனைத்தையும் தாண்டி உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேரடியாக தமிழகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஏன் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியது என விமான நிலையத்தில் அமிட்ஷாவை வரவேற்ற மூத்த பெண் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என மனு கொடுத்து இருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக ஊழல் செய்த காரணத்தால் அவர் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி அண்ணாமலை புகார் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் அமிட்ஷா வருகைக்கு பிறகு ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்த புகார் மனு மீதான நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் திமுகவினர் கப் சுப் என அமைதியாக இருக்கிறார்களாம்.வழக்கமாக அமித்ஷா அல்லது பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்தால் சமூக வலைத்தளங்கள் தொடங்கி அமிட்ஷா செல்லும் இடங்களில் go back என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் பல திமுகவினர் கூட இந்த முறை அமைதியாக கடந்து செல்வது என்ன காரணமாக இருக்கும் என பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.