24 special

மாஸ் காட்டிய தமிழிசை அதிர்ந்த தெலுங்கானா முதல்வர்

Tamilaisaisoundrajan,Chandrashekar Rao
Tamilaisaisoundrajan,Chandrashekar Rao

தமிழகத்தில் எப்படி அரசியல் களம் அனல் பறக்கிறதோ அதற்கு இணையாக தெலுங்கானா மாநிலத்திலும் அரசியல் களம் படு உஷ்ணமாக சென்று கொண்டு இருக்கிறது, தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரான சந்திர சேகர ராவ் என்றால் மம்தா பேனர்ஜிக்கு இணையாக முன் வைத்த காலை பின் வைக்காதவர் என்ற பேச்சு பல காலமாக அடிபட்டு வந்தது....,


ஆனால் அவற்றை எல்லாம் தூள் தூளாக மாற்றி இருக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என்கின்றன தெலுங்கானா வட்டாரங்கள்... அதிலும் நேற்றைய தினம் ஆளுநரின் செயல்பாட்டை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறதாம் ஆளும் கட்சியான டிஆர்எஸ்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது சரியாக காலை 11 மணிக்கு பொதுமக்களை சந்தித்து ஆளுநர் தமிழிசை புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார் என தகவல் வெளியானது.

வழக்கமாக 500 பேர் வரை பொதுமக்கள் ஆளுநரை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்க்க பட்டது, அங்குதான் ஆச்சர்யம் காலை முதலே பொதுமக்கள் ஆளுநரை சந்திக்க குவிந்தனர், கூட்டம் அதிகமானதை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிகரிக்க பட்டனர்.

சொன்னபடி பொதுமக்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் ஆளுநர் மாளிகையில் குவிய நேரத்தை பொறுப்படுத்தாமல் அனைவரையும் சந்தித்தார். இது தெலுங்கானா மாநில அரசியலில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

முதல்வர் மாளிகையில் பொதுமக்கள் செல்வதே குதிரை கொம்பாக இருக்கும் சூழலில் ஆளுநர் தமிழிசை பொதுமக்களை புத்தாண்டு தினத்தில் நேரடியாக சந்தித்தது மக்களுக்கான தலைவர் யார் என்ற விவாதத்தை எழுப்பிய நிலையில் அதிர்ந்து w தெலுக்கான முதல்வர் சந்திர சேகரராவ்.

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை அறிவிக்கப்பட்ட போது தமிழிசை எப்படி சந்திர சேகர ராவை சமாளிக்க போகிறார் என ஊடகங்கள் பல விவாதம் நடத்திய நிலையில் இன்று தனது மக்கள் செயல்பாடுகள் மூலம் சந்திர சேகர ராவ் எப்படி ஆளுநர் தமிழிசையை சமாளிக்க போகிறார் என களத்தை மாற்றி அமைத்து இருக்கிறார் தமிழிசை.

பிரதமர் மோடியின் தேர்வாக ஆளுநராக தேர்வு செய்யப்பட்ட தமிழிசை களத்தில் இறங்கி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் திறம்பட செயல்படுவதை பார்த்த பலர் பிரதமர் மோடியின் தேர்வு என்றைக்கு வீண் போயிருக்கிறது சாபஸ் தமிழிசை அடித்து ஆடுங்கள் தமிழகத்திற்கு பெருமை சேருங்கள் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர் .