தமிழகத்தில் 100-ல் ஒரு படங்கள் வீதம் மட்டுமே இந்து மதத்தின் பெருமையையும், இந்து மதத்தை கிண்டல் செய்பவர்கள் குறித்து விமர்சனம் செய்பவர்களை தோல் உறுத்து காட்டும் வண்ணம் தயாரிக்க படுகின்றன, அந்த வகையில் புதுமுக இயக்குனர் வீரமுருகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் கிடுகு.
இதன் டீஸர் காட்சி வெளியாகி கடும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அந்த டீஷர் காட்சிகளை நீக்க கோரி தமிழக காவல்துறை தரப்பில் அழுத்தம் கொடுத்ததாக பட குழு குற்றம் சாட்டியது, மேலும் சென்சார் செர்டிபிகேட் வழங்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது இந்த சூழலில் தமிழக பாஜக தலையிட்டு பட குழுவிற்கு சென்சார் சான்றிதழ் பெற உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிடுகு படம் வெளியாக தொடர்ச்சியாக தியேட்டர்கள் மறுக்கப்பட்டு வருகிறதாம், அத்துடன் OTT பிளாட்பார்மில் மக்களுக்கு கொண்டு செல்லலாம் என்றால் அங்கும் மிரட்டல் கொடுக்க படுகிறதாம், இதனால் அதிர்ச்சி அடைந்த பட குழு தீர்க்கமாக முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறதாம், அதில் தொடர்ச்சியாக கிடுகு படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றால், வீதி வீதியாக பழைய காலங்களில் டெண்ட் கட்டி படம் ஒளிபரப்புவது போன்று படத்தை வெளியிட அனுமதிக்க கோரி கிடுகு படக்குழு நீதிமன்றதை அணுக இருக்கிறதாம்.
இது குறித்து TNNEWS24 DIGITAL பக்கத்திற்கு நேர்காணல் கொடுத்து இருந்த வீரமுருகன் இந்த தகவலை நம்மிடம் பகிர்ந்து இருந்தார். தொடர்ச்சியாக இது போன்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்தால் வரும்காலத்தில் இது போன்ற படங்கள் வெளியாகாது என கணக்கு போட்ட நபர்களுக்கு வீரமுருகன் TNNEWS24 க்கு கொடுத்து பேட்டி பேரிடியாக அமைந்து இருக்கிறது.
படம் பட்டி தொட்டி எங்கும் ஒளிபரப்புவோம் என இயக்குனர் தெரிவித்த கருத்தால் தமிழக அரசு ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமோ என கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறதாம்.பேட்டி...முழுமையான பேட்டியை பார்க்க TNNEWS24 யூடுப் பக்கத்தை பார்வையிடவும்.