அமெரிக்க அதிபர் பைடன் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த பைடன் நாட்டோ நாடுகளின் ஒரு பிடி மண்ணை கூட ரஸ்யா எடுக்க முடியாது அத்துடன் மேலும் பேசிய பைடன் உக்ரைன் போரில் திட்டமிடுதலில் ரஸ்யா தோல்வி அடைந்ததாகவும் குறிப்பிட்டார் பைடனின் இந்த பேச்சு வரை எந்த தவறும் இல்லை.
அதன் பிறகு பேசிய பைடன் ரஷ்ய மக்கள் எங்களின் எதிரிகள் கிடையாது. ஆனால் இனி புடின் ஆட்சி அதிகாரத்தில் இருக்க கூடாது. நாங்கள் உக்ரைன் மக்களுடன் இருக்கிறோம். உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். நேட்டோவை காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
பிடனின் இந்த கருத்து கடும் சர்ச்சையாக மாறியுள்ளது அதாவது மற்ற நாட்டில் எந்த அரசாங்கம் இருக்க வேண்டும் இருக்க கூடாது மேலும் யார் அதிபராக தொடர வேண்டும் கூடாது என தெரிவிக்க எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை, அத்துடன் சமபலம் கொண்ட ரஸ்யா நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கவும் அமெரிக்க அதிபருக்கு உரிமையில்லை, அப்படி பேசினால் நேரடியாக போருக்கு செல்வதற்கு சமமாகும்.
பைடனின் இந்த கருத்து கடும் சர்ச்சையாக உருவாக வெள்ளை மாளிகை பதறிக்கொண்டு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம், அதிகாரா மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பைடன் பேசவில்லை. புடின் பற்றி பைடன் பேசியது அவரின் எழுதப்பட்ட உரையிலேயே இல்லை.
புடின் மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த கூடாது என்று பொருள்படும் வகையில் மட்டுமே அப்படி பேசினார். ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை, என்று வெள்ளை மாளிகை திடீர் பல்டி அடித்து விளக்கம் கொடுத்துள்ளது.இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரஷ்யாவில் யாருடைய ஆட்சி நடக்க வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள் முடிவு செய்வார்கள் அதை சொல்ல நீங்கள் யார்? யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய மக்கள்தான் முடிவு செய்வார்கள். நீங்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. உக்ரைனில் எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை போர் தொடரும், என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பைடனின் பேச்சுக்கள் சர்ச்சையை உண்டாக்கி வரும் நிலையில் அமெரிக்கா ரஷ்யா நிழல் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.