24 special

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் புதிய பிரச்சனை

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

எங்களிடம் அநியாயமாக வசூல் செய்கிறார்கள், எங்கள் கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் பணத்தை அநியாயமாக பிடுங்குகிறார்கள் என தொழிற்சங்கவாதிகள் தற்பொழுது கரூர் கம்பெனியை நெருக்க ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி நெருக்கமானவர்கள் வீட்டில் நடந்து வரும் ரெய்டு தான் பேசுபொருளாக மாறி உள்ளது. தமிழக மின்துறை மற்றும் ஆயத்துறை தீர்வு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது முக்கிய அமைச்சராக இருந்து வந்த நிலையில் தற்போது சர்ச்சை அமைச்சராக உருவெடுத்துள்ளார். 


திமுகவினரே இவருக்கு ஏன் இந்த வேலை தேவையில்லாத வேலை கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார் என மற்றவர்களிடம் புலம்பும் அளவிற்கு செந்தில் பாலாஜி நடவடிக்கைகள் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு துறைகளை கையில் வைத்துக்கொண்டு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் இப்படி கட்சிக்கு தேவையில்லாமல் அவப்பெயர் மட்டுமே ஏற்படுத்தி வருகிறார் எனவும் திமுகவின் ஆதரவாளர்களே கூறி வருகின்றனர். மேலும் ரெய்டு வந்த அதிகாரிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது, பெண் அதிகாரியின் கை எலும்பை முறித்தது என திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இந்த நிலையில் இந்த ரெய்டு எல்லாம் நடப்பதற்கு முன்பாக தி மு க அமைச்சர் செந்தில் பாலாஜி மீது யாராவது சமூக வலைதளத்தில் விமர்சனம் வைத்தாலே உடனடியாக அவதூறு வழக்கு போடுவதும், அவர்களை நோக்கி கோர்ட் நடவடிக்கைகள் மற்றும் அபராதம் கேட்பதும் செந்தில் பாலாஜி தரப்பினர் வழக்கமாக வைத்திருந்தார். 

இதன் காரணமாகவே தொழிற்சங்கவாதிகளான டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக்குகளில் வேலை செய்யும் தொழிற்சங்கவாதிகள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் கொடுக்கவே பயந்து வந்தனர். ஒரு சில தொழிற்சங்கங்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆனால் அந்த போராட்டமும் அவ்வப்போது பெரிதளவில் பேசப்படாமல் கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்தது இந்த நிலையில் தற்போது தொழிற்சங்கங்கள் அனைவரும் தொழிற்சங்கங்கள் அனைவரும் கரூர் கம்பெனிக்கு எதிராக கட்டம் கட்ட துவங்கி உள்ளனர். 

'கரூர் குரூப்' என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அராஜகமாகப் பணம் வசூல் செய்வோரைத் தடுக்கக் கோரி, சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மத்திய மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக `கரூர் குரூப்' என சொல்லிக் கொண்டு மனோகர், சம்பத் மற்றும் ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ரூ.50 ஆயிரம், ரூ.45 ஆயிரம் எனக் கடைகளின் விற்பனைக்கு ஏற்றார்போல் பணம் தர வற்புறுத்துகின்றனர். மாவட்ட மேலாளர் கூறியதாலேயே கடைகளில் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள் யார், எதற்கு கடையிலிருந்து பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டால் பணம்கொடுக்காத கடைப் பணியாளர்களை சோதனையில் சிக்க வைத்து பணிநீக்கம் செய்ய வைப்போம் என மிரட்டுகின்றனர். இவ்வாறு அதிகாரிகளைக் காட்டி, மிரட்டி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் கூறியதாவது: கள்ளச்சாராயத்தால் ஏற்கெனவே அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது, கரூர் குரூப் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் தனக்குத் தொடர்பில்லை எனஅமைச்சர் கூறுகிறார். அப்படியானால் இந்தளவுக்குச் செயல்பட அந்த நபர்களுக்கு யார் துணிச்சல் தருகிறார்கள். இதற்கு சிலதொழிற்சங்கங்களும் உடந்தையாக இருக்கின்றன.

இது போதாது என மாவட்ட மேலாளர்கள் நடத்தும் கூட்டத்திலும் கரூர் குரூப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என சில மாவட்ட மேலாளர்களே கூறுகின்றனர். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய டாஸ்மாக் இயக்குநர் குழுவும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இப்படி ஒரு பக்கம் ரெய்டு, மறுபக்கம் அமைச்சரவை மாற்றத்தில் பெயர் அடிபடுவது என செந்தில் பாலாஜி தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வரும் வேளையில் இப்படிக்கு அவரது துறையை சார்ந்த தொழிற்சங்கங்களும் கரூர் கம்பனிக்கு எதிராக கட்டம் கட்டி திரும்புவது நல்லதாக படவில்லையே என செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.