24 special

சத்தமில்லாமல் தல செய்த சாதனை!

actor ajith
actor ajith

பண்டைய காலத்தில் இருந்து போர் என்பது ஒவ்வொரு நாட்டிற்கிடையிலும் நடைபெற்று வருவது அதுவும் ஒரு நாட்டில் உள்ள மனிதர்கள் ராணுவ படை என்ற ஒரு அணியில் இணைந்து போருக்கான பயிற்சிகளை பெற்று மற்றொரு நாடுடன் போரிலும் தன்னாட்டை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுவர். இருப்பினும் சில போதைப் பொருள்கள், தீவிரவாத செயல்கள் போன்றவை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டே உள்ளது. இதை தடுப்பதற்காக பல முயற்சிகள் ராணுவ தரப்பில் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த போதைப்பொருள் கடத்தல் மட்டும் எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெற்று வருவது எந்த ஒரு நாடாக இருந்தாலும் அச்சிறுத்தலை ஏற்படுத்தக் கூடியது. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவியல் பூர்வமாகவே அதாவது தற்போது வளர்ந்துள்ள விஞ்ஞான ரீதியில் சில புதிய கருவிகளை தயாரிக்கும் பணியில் முக்கிய அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடைபெற்ற வந்தது. 


இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எம் ஐ டி தொழில்நுட்ப கல்லூரியில் இது குறித்த ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது. அதாவது தக்ஷா என்ற அணியை உருவாக்கி ஆளில்லா விமானத்தை இயக்கும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனை அறிந்து கொண்ட நடிகர் அஜித்குமார் எம் ஐ டி யில் உள்ள தக்ஷா மாணவ அணி உடன் இணைந்து ஆளில்லா விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதாவது பல ஆண்டுகளாகவே ரிமோட் கண்ட்ரோலின் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த நடிகர் அஜித் தாமாக முன்வந்து எம் ஐ டி தக்ஷா அணியுடன் இணைய அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர் நிர்வாகிகளை அணுகி கிட்டத்தட்ட 10 மாதங்களாக தக்ஷா அணியின் ஆலோசகராகவும் ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் விமானியாகவும் செயல்பட்டுள்ளார். 

இதுகுறித்து விமான துறை இயக்குனரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான செந்தில்குமார், நாங்கள் ட்ரோன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது அறிந்து கொண்ட அஜித் அவராகவே முன்வந்து எங்களுக்கு ஆலோசனை கொடுத்தார், உதவிகளையும் வழங்கினார். எங்களது பைலட்ஸ்களும் இங்கு இருந்தனர் ஏனென்றால் அவர் ரேசில் அதிக ஈடுபாடு கொண்டவர் இதனால் நேரம் துல்லியம், திட்டங்கள் வகுப்பதில் சிறந்தவர்! ஹெலிகாப்டர் டிரான்சிலும் இவர் பறந்துள்ளார். மேலும் எப்படி ஒரு குறிப்பிட்ட தூரத்தை ட்ரோன் மூலம் கடக்க முடியும் என்பது குறித்து தங்களது மாணவர்களுக்கு விளக்கமாக ஆலோசனை கொடுத்தார் பயிற்சியும் வழங்கினார். நடிகர் அஜித் வழங்கிய பயிற்சியின் மூலமாகவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான போட்டியில் இவ்வணி பங்கேற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது.  ட்ரோன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கு அனுபவமும் திறனுமே எங்களுக்கு தேவையாக இருந்தது அதனை அஜித் கொடுத்து உதவி புரிந்தார் என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

இந்த நிலையில் அஜித்தின் ஆலோசனையின் கீழ் எம் ஐ டி கல்லூரிகள் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் இந்திய எல்லை கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எம்ஐடி கல்லூரியில் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் ட்ரோன் குறித்த ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் இந்த கல்லூரியின் தக்ஷா அணியால் உருவாக்கப்பட்ட கோபுர ட்ரோன்கள் 12 மணி நேரம் வரை இயக்கம் வகையில் எம்ஐடி மாணவர்கள் தயாரித்ததற்கு காப்புரிமை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது மட்டுமின்றி இந்த வகை ட்ரோன்களை எல்லை புறத்தில் பாதுகாப்பு பணியில் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த செய்திகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருவதால் சத்தம் இல்லாமல் இப்படி ஒரு சாதனை அஜித் செய்து விட்டாரே என்ற கமெண்ட்கள் முன்வைக்கப்படுகிறது.