Cinema

தலைவரைப் புகழ்ந்த கமலின் அண்ணன்…. வேற லெவல் வீடியோ!

kamalhassan, rajinikanth
kamalhassan, rajinikanth

தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலே மாபெரும் இரு ஆளுமைகளுக்கிடையே போட்டி நிலவுவது வழக்கமான ஒன்று. இதன்படி எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் என இந்த வரிசை இன்று வரை நீடித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஜோடிகளுக்கு இடையிலான போட்டிகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது அந்த வகையில் தற்போது வரை ரஜினி கமல் இருவருக்கும் இடையான போட்டி இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 1980களில் இருவரும் தனித்தனியான படங்களில் நாயகனாக நடிப்போம் என்று முடிவெடுத்த ரஜினி மற்றும் கமல் கிட்டத்தட்ட 14 படங்களை ஒரே நாளில் திரையிட்டுள்ளனர். அப்படி இவர்கள் திரையிட்ட படங்களில் முதலில் திரையிடப்பட்டது தங்க மகன் - தூங்காதே தம்பி தூங்காதே, இந்த இரண்டு படமும் ரஜினி மற்றும் கமலின் முதல் போட்டி படமாகும் இருப்பினும் இரண்டு படங்களும் இருவருக்குமே வெற்றியை கொடுத்தது. 


இதற்கு அடுத்ததாக வெளியான நல்லவனுக்கு நல்லவன் என்ற ரஜினி படமும் எனக்குள் ஒருவன் என்கிற கமல் படமும் போட்டி போட்ட பொழுது ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் படம் வருமான ரீதியாகவும் மக்களின் வரவேற்பையும் பெற்று இப் போட்டியில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் - காக்கிச்சட்டை, படிக்காதவன் - ஜப்பானில் கல்யாணராமன், மாவீரன் - புன்னகை மன்னன், மனிதன் - நாயகன் என 1987 ஆண்டு வரை ரஜினி மற்றும் கமல் இருவரின் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் அதிகளவில் ரஜினியின் படமானது அதிக வரவேற்பையும் பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து  இன்று வரையிலும் ரஜினி கமல் இடையேயான போட்டிகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படமே அதிக வசூலை பெற்றது என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் கமலின் படமே அதிக வரவேற்பு பெற்றது என்று கமல் ரசிகர்களும் இன்றளவும் போட்டி போட்டுக் கொண்டே உள்ளனர். தற்பொழுது இந்த போட்டியானது சமூக வலைதளங்களிலும் அதிகமாக முற்றியுள்ளது. 

சமீபத்தில் கூட கமலின் விக்ரம் இரண்டாம் பாகம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அதிக வரவேற்பு பெற்றது. ஆனால் ரஜினிக்கு ஜெய்லர் திரைப்படம் மாஸ் ரி என்ட்ரி கொடுத்தது. வழக்கம்போல இந்த முறையும் ரஜினியே அதிக வசூலை பெற்றதாக சமூக வலைதளங்களில் மீண்டும் வார்த்தைப் போர்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ரஜினி குறித்து கமலஹாசனின் அண்ணனான சந்திரகாசன் சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றி பகிர்ந்து உள்ளார். அதாவது சமீபத்தில் தனியார் பேட்டியில் பேசிய சந்திரகாசன் "கமலை விட ரஜினியின் அளவு என்பது உயரமாகும், எங்கே இருந்தாலும் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதியை கும்பிடுவதற்காக தான் வடக்கே மற்றும் தெற்கிலிருந்து செல்கிறார்கள்! அதேபோன்று ஒரு அமைப்பு தான் ரஜினிகாந்த்திற்கு உள்ளது. கடவுளுக்கு சமமான ஒரு பெயர், தவறு கூற முடிந்தால் கூறுங்கள் கடவுளிடம் தவறு கூற முடியாது என்றால் ரஜினியிடம் தவறு கூற முடியாது. நீங்கள் வேறு யாரையாவது வைத்து ரஜினியை தாண்ட வேண்டும் என்று நினைத்தால் அது கடவுள் மட்டுமே! வணக்கம் செய்பவர்களை உங்களால் அசைக்க முடியாது என்று சூப்பர் ஸ்டாரை கடவுளுக்கு சமமாக கூறி புகழ்ந்து பேசினார். இப்படி கமலஹாசனின் குடும்பத்திலிருந்து ரஜினிகாந்தை புகழ்ந்து குறித்த வீடியோ வைரலாவது ரஜினி ரசிகர்களால் அதிகமாக பகிரபடுகிறது.