24 special

அலறியடித்து தூத்துக்குடி விஜய் போன விஷயம் கசிந்தது...

actor vijay
actor vijay

தமிழ் சினிமாவின் கருப்பு எம்ஜிஆர் ஆகவும் சிவந்த கண்களோடு நிமிர்ந்த பார்வையோடு நாட்டை காக்கும் ராணுவ வீரனாய் காவல் அதிகாரி கிராமத்து தலைவனால் தேமுதிக தலைவராக அவதரித்த கேப்டன் விஜயகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது உடல் சிகிச்சைக்கு பலன் அளிக்காததால் மரணம் அடைந்தார். இவரது மரணம் பல திரை உலக பிரபலங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது அதுமட்டுமின்றி தமிழக மக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் விஜயகாந்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். விஜயகாந்தின் உடலை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அவரது உடல் சென்னை தீவுதிடலுக்கு மாற்றப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது, சமூக வலைதளங்கள் முழுவதும் விஜயகாந்தின் வீடியோ மற்றும் விஜயகாந்த்தின் புகைப்படங்கள் என குவிந்தது. 


அதோடு விஜயகாந்த் அரசியலில் படு ஆக்டிவாக இருந்த காலத்தில் அவரை சுற்றி நடந்த சூழ்ச்சிகள், ஏமாற்று வேலைகள், துரோகங்கள் என்ன பல உண்மைகள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் எதிர்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்த செய்தியை அறிந்த பிரதமர் உடனே தனது இரங்கலை பதிவிட்டதோடு தனது சார்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழகத்திற்கு அனுப்பி அஞ்சலி செலுத்த வைத்தார். இதற்கிடையில் இளைய தளபதியாக வலம் வரும் நடிகர் விஜய் விஜயகாந்த்தை இரவோடு இரவாக சென்று பார்த்தார் ஆனால் அங்கு சென்ற விஜய்க்கு பல பதிலடிகள் கிடைத்தது எதற்காக அந்த பதிலடி என்றால்! விஜயின் திரை வாழ்க்கை தொடக்கத்தில் தோல்வியை சந்தித்த விஜய்க்கு செந்தூரப் பாண்டி படத்தில் மூலம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமின்றி விஜய் என்ற ஒரு நடிகரை மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

அதற்குப் பிறகு விஜயின் திரை வாழ்க்கை பயணம் ஏறு முகத்தை கண்டது. அப்படி இருக்கும் பொழுது விஜயகாந்த் சிகிச்சை பெற்று இருக்கும் பொழுதோ சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பொழுதோ விஜய் அவரை பார்க்கச் சொல்லவில்லை என்பதும் தொலைபேசி மூலம் கூட அழைத்து விசாரிக்கவில்லை என்பதும் விஜயகாந்தின் ரசிகர்களையும் தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்தது. அவர் உயிருடன் இருக்கும் பொழுது வந்து பார்க்கவில்லை இறந்த பிறகு வந்து பார்க்கிறாயா என்ற கோபங்களும் ஆத்திர வார்த்தைகளும் விஜய்யை நோக்கி வந்தது, மேலும் விஜயகாந்தை பார்க்கவே கூடாது வெளியே போ வெளியே போ என்ற கண்டன வார்த்தைகளும் தொண்டர்கள் மத்தியில் எழுந்த வீடியோகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதோடு விஜய் மீது காலணிகளும் வீசப்பட்டது, இப்படி பலத்தை எதிர்ப்புகளையும் மீறி விஜயகாந்தை பார்த்து விட்டு திரும்பினார் நடிகர் விஜய். அன்று இரவே விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து தூத்துக்குடி நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என கூறினாராம். அதாவது சமீபத்தில் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியில் நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த நிவாரண பொருட்களை வழங்கும் திட்டம் முன்பாகவே விஜய் தரப்பில் திட்டமிடப்படவில்லை என்றும் விஜயகாந்தின் இறுதி சடங்கில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அவரே தூத்துக்குடிக்கு நேராக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என தகவல்கள் கசிந்துள்ளது.