24 special

பாஜக செய்த செயல் தமிழக மக்கள் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது...!

mk stalin, amitshah
mk stalin, amitshah

தமிழகத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடங்கி முதல்வர் வரை ஏன் தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் பாஜகவை தமிழக மக்களின் எதிரியாக சித்தரித்து வரும் நிலையில் இன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்னும் சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் வடியாததால் மக்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் நிலை நீடிக்கிறது.இந்நிலையில் பிரதமர் மோடி உடனடியாக சென்னை சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உத்தரவு போட்டார் இதையடுத்து இன்று  சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மழை பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.


அவர் ஆய்வை முடித்த சில நிமிடங்களில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2ஆவது தவணையாக ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும், தமிழகத்துக்கு ரூ.450 கோடியும் மத்தியப் பங்காக முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார்.இரு மாநிலங்களுக்கு இதே தொகையின் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “கடந்த 8 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இதுபோன்ற வெள்ள பாதிப்பைச் சென்னை சந்தித்துள்ளது.

பெருநகரங்களில் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நாம் அதிகம் பார்க்கிறோம்.எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 561.29 கோடி ஒதுக்கீடு செய்யப் பிரதமர் மோடி உத்தரவிட்டதையடுத்து, அந்த நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்” என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடி வெறும் நிவாரண தொகை மட்டும் தமிழக அரசிற்கு கொடுக்காமல் கூடவே சென்னையை சீர் அமைக்க நிதியும் ஒதுக்கி இருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. அதே நேரத்தில் இதை திமுக அரசு 4 ஆயிரம் கோடி போன்று ஸ்டிக்கர் ஒட்டாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சென்னையை சீர் அமைக்கவும் பயன்படுத்துமா என்பதே இப்போதைய முதல் கேள்வியாக எழுந்து இருக்கிறது.

சென்னையின் வாக்காளர்களாக இல்லாமல் வாடகை வீட்டில் குடி இருந்த பலரும் தங்கள் உடமையை இழந்து தவித்து வருவதால் பிரதமர் மோடி ஒதுக்கிய நிதியில் இருந்து அவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என்பதே தற்போது பெரும்பாலான பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.பிரதமர் மோடியை தமிழகத்திற்கு எதிரானவர் என முதல்வர் ஸ்டாலின் முதல் அடிமட்ட திமுகவினர் வரை பிரச்சாரம் செய்த நிலையில் இன்று முதல் நபராக தனது கடமையை செய்து இருக்கிறார் பிரதமர்.