24 special

ஆளுநர் கேட்ட அந்த அறிக்கை...!அப்போ அது கன்பார்மா..!

Rnravi,amitsha
Rnravi,amitsha

மோசடி வழக்கில் கைதாகி உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது என்று தமிழக ஆளுநர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் தமிழக அரசியலை பரபரப்பாகியது. இதற்கு முன்னதாக திமுக விற்கும் தமிழக ஆளுநருக்கும் அரசியல் ரீதியாக கருத்துமோதல்கள் ஏற்பட்டுவந்த நிலையில் இந்த விவகாரமும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அறிவித்ததற்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை தமிழக அரசியலில் மட்டுமல்லாது பிற மாநில அரசியல்களிலும் பேசும் பொருளாக மாறியது. தமிழக ஆளுநர் இந்த அறிக்கையை அறிவித்து சில மணி நேரங்களுக்கு பிறகு இதனை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் அறிவுறுத்தலின்படி அட்டர்னி ஜென்டலுடன் கலந்தாலோசித்த பிறகு இது பற்றிய முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என்று ஆளுநர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் திடீரென்று தமிழக ஆளுநர் டெல்லி விரைந்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசித்தார். அந்த ஆலோசனையில் செந்தில் பாலாஜி வழக்கு பற்றி இருவரும் பேசிக் கொண்டதாகவும் செய்திகள் பல வெளியானது. ஆளுநர் டெல்லி சென்ற பிறகு தமிழகம் முழுவதும் ஒரு ஆளுநருக்கு  அமைச்சரை பதிவில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா என்ற கருத்து பேசும் பொருளாக மாறி ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் டெல்லி சென்ற ஆளுநர் தனது வேலையில் கவனம் செலுத்தி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணியை சந்தித்து அமைச்சர்களின் நியமனம், பதவி நீக்கம், குறிப்பாக செந்தில் பாலாஜியின் விவகாரத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களை குறித்து ஆலோசனைகளை பெற்று கொண்டார். இப்படி டெல்லியில் தனது ஆறு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு கடந்த ஜூலை 12 ம் தேதி சென்னை வந்தடைந்தார் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி.

சென்னை திரும்பியவுடன் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழக ஆளுநரை ராஜ் பவனில் சந்தித்துள்ளார். டெல்லியில் சட்ட வல்லுநர் மற்றும் அதிகாரிகளுடன் தீவிரமான கலந்த ஆலோசித்த பிறகு சென்னை திரும்பிய மறுநாளே தமிழக ஆளுநரை தலைமைச் செயலாளர் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் இருந்த நிலையை மேலும் கொதிப்படைய வைத்தது. மேலும் தமிழக ஆளுநர் நிர்வாகத்தில் என்னென்ன நடக்கிறது? என்ற தகவல்கள் சிலவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆட்சியின் பொறுப்பு, சட்ட ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளை பற்றி ஆளுநர் அறிக்கையாக கேட்டுக் கொண்டதாகவும் விரைவில் அந்த அறிக்கைகள் அனைத்தும் விரைவில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும் அறிக்கையை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஆளுநர் இறங்குவர் என்றும், டெல்லி தலைமையகத்திடம் கொடுத்து தமிழக நிலையை விளக்குவார் ஆளுநர் என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஆட்சி கலைப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து வந்த அடுத்த நாளே தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை அழைத்து பேசியது அறிவாலய வட்டாரத்தை பரபரக்க வைத்துள்ளது.