24 special

எங்கே போனாலும் கேட் போடுறாங்களே...! விரட்டப்பட்ட கனிமொழி கீதாஜீவன் ..!

Kanimozhi,geethajeevan
Kanimozhi,geethajeevan

திமுகவைச் சேர்ந்த கனிமொழி  தூத்துக்குடி தொகுதியில் கடந்த தேர்தலில் நின்று எம்பி யாக தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி எம்பி ஆக இருந்தாலும் இவர் தன் தொகுதிகளுக்கு சில நலத்திட்ட உதவிகளை இதுவரை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது இருந்து வந்துள்ளது. அடுத்த முறை தேர்தலில் கனிமொழி ஓட்டு கேட்டு வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தூத்துக்குடி தொகுதி மக்களே மிகுந்த கோபத்தில் இருந்ததாகவும் சில செய்திகள் பரவியது. இவை அனைத்தையும் உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்த கனிமொழியை வழி மறித்து தூத்துக்குடி மக்கள் புகார் அளித்தது திமுகவை சற்று ஆட்டம் காண வைத்துள்ளது. 


அதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படுவதற்கான துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது அதில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்பி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்றுள்ளனர். அந்த விழாவிற்கு பிறகு கழுகுமலை பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தொட்டி பூங்கா பணிகள் அமைக்கப்பட இருந்தது அந்த பணிகளின் துவக்க விழாவிலும் கனிமொழி கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார். அதோடு கழுகுமலையின் தெற்கு பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் மற்றும் துரைசாமி பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கனிமொழி எம்பி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் கழுகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்த பொழுது வானரமுட்டி கிராமத்தில் இருந்து திரண்ட பொதுமக்கள் கனிமொழியின் காரை வழி மறைத்து நாங்கள் குடிநீர் பற்றாக்குறையால் தினமும் வாடி வருகிறோம் எங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை அதனால் எங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கூட்டமாக மற்ற அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் வருகிறது எங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்று வேதனையுடன் எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கூட்டத்திலிருந்து ஒவ்வொருவரும் கோரிக்கை விடுத்தனர். 

அதற்கு கனிமொழி மழையே வரவில்லை அல்லவா அதனால் தான் இருங்கள் நான் என்ன என்று பார்க்கிறேன் என்று கூறிவிட்டு ஒரு ஐந்து நிமிடம் கூட அங்கு இருக்காமல் விரைந்து சென்றார் அப்பொழுதும் மக்கள் கூட்டத்தை கலைக்காமல் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது கோரிக்கையை கூட முழுமையாக நின்று கேட்காமல் சென்றுவிட்டார் என்று மக்கள் தரப்பில் அதிருப்திகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே போட்டியிட உள்ள நிலையில் இப்படி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் கனிமொழி தவித்து நிற்கிறார். மேலும் நமக்கு எதிர்ப்பலைகள்  இப்படியே நீடித்தால் டெபாசிட் கூட வாங்க முடியாது என கனிமொழி தரப்பு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பூரண மதுவிலக்கை கொடுப்போம் என்று மக்கள் மத்தியில் வாக்களித்து விட்டு அதற்க்கு மக்களுக்கு பதில் கூற முடியாமல் திண்டாடி வருகிறோம் இதற்கே மக்கள் அப்போது பேசிய வீடியோவை எடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நம் சொந்த தொகுதியில் ஒரு நல்ல பெயரை வாங்க முடியவில்லை என்ன செய்வது எதையாவது செய்து நற்பெயரை வாங்க வேண்டும் என்று கனிமொழி தரப்பு சிந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.