24 special

மீண்டும் அதே சம்பவத்தை நடத்திய உடன்பிறப்புகள்...? ஆனா முடிவு.....?

udhayanithi, senthil balaji
udhayanithi, senthil balaji

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாய் இருந்தாலும் சரி ஏன் சாதாரணமாக நமக்கு தோன்றும் எண்ணமாக இருந்தாலும் சரி அனைத்தையும் மீம்ஸ்கள் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் தெரிவிக்கிறதை ஒவ்வொருவரும் தனது வழக்கங்களில் ஒன்றாக வைத்துள்ளனர். குறிப்பாக அரசியலைப் பொறுத்தவரையில் நடைபெறும் போர்களில் ஒன்றாக தற்போது மீம்ஸ் போர்கள் உள்ளது. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தற்போது தெரிந்த ஒன்று ஆனால் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை இட்ட பொழுது அதாவது சோதனை இட சென்ற பொழுது சோதனை செய்த அதிகாரிகளை அடித்து விரட்டியது மட்டுமல்லாமல் அவர்களிடம் அத்துமீறினார்கள் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்.


அவர்கள் சென்ற அடுத்த சில நாட்களில் 'இது காலா கில்லா' என்ற தலைப்புடன் காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்டைலை போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உருவம் எடிட் செய்யப்பட்டு போஸ்டர்கள் பல பகுதிகளில் ஒட்டப்பட்டது.  இதன் மூலம் செந்தில் பாலாஜியை யாராலும் தொட முடியாது அமலாக்கத் துறை வந்தாலும் சரி வருமானவரித்துறை வந்தாலும் சரி யாராலும் செந்தில் பாலாஜியின் பக்கம் கூட செல்ல முடியாது அவருக்கு எதிராக ஒரு ஆதாரத்தை பெற முடியாது என்ற வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது என பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்குப் பிறகு அவர் பல வழக்குகளில் சிக்கியதோடு அடி மேல் அடிபட்டு புழல் சிறையில் இருக்கிறார். மேலும் இந்த போஸ்டர் ஒட்டியவர்களும் தற்போது தேடப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்தியா முழுவதும் சனாதனம் பற்றிய கருத்துக்கள் பேசுபொருளாக இருந்து வருகின்றது இந்த பேச பொருளுக்கு காரண கர்த்தாவாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறித்து தற்போது ஒரு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 82 ஆவது வட்டம் பெரிய கடை வீதி பகுதியில் அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சில திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் முகங்கள் பொறிக்கப்பட்டு 'போலி சாமியாரே 100 கோடி தருகிறோம் தொட்டுப்பாரடா பார்க்கலாம்' என்ற வார்த்தைகளிடம் பெற்று அப்பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கமாலுதீன் ராஜா போஸ்டரை அடித்துள்ளார். இந்த போஸ்டருக்கு பலமான மீம்ஸ் கருத்துக்கள் மற்றும் பதிவுகள் வைரல் ஆகி வருகிறது.

இந்த போஸ்டை மேல்பக்கத்திலும் கீழ்ப்பக்கத்தில் செந்தில் பாலாஜி தற்போது இருக்கும் உடல் பாவனையுடன் தலையில் துண்டை போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது போன்று இப்படித்தான் எனக்கும் தொட்டுப்பார் என்று போஸ்டர் அடிச்சாங்க என்று அவர் கூறுவது போல வடிவேலு ஒரு படத்தில் இதே தான் அந்த டேய்லரும் சொன்னான் என்பதை நினைவுபடுத்தும் வகையில் பதிவுகள் உருவாக்கப்பட்டு மீம்ஸ்கள் பறக்க விடப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது பல அரசியல் விமர்சனங்கள் எழுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. இதே மாதிரி தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாவதற்கு முன்பு போஸ்டர்கள் அடிக்கப்பட்டதும் அதற்கு பிறகு அவரது நிலைமை தலைகீழாக மாறிய நிகழ்வும் நடந்தது. தற்போது இதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கும் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது செந்தில் பாலாஜி போன்று இவரது நிலைமையும் மாறுமா? செந்தில் பாலாஜியை போன்று ஜாமீன் என்ற வார்த்தை எப்பொழுது என் காதில் கிடைக்கும் என்று உதயநிதியும் ஏங்க வைக்கப்படுவாரா என்ற கேள்விகளும் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இவை அனைத்தையும் தாண்டி அரசியலில் இதெல்லாம் சாதாரணம் பாஸ் என்ற மீம்சும் தற்போது இருக்கும் சூழலுக்கு கணக்கச்சிதமாக  பொருந்தியுள்ளது.