24 special

தேமுதிகாவின் எதிர்காலம்? வெளியான தகவல்.... !

Piremalatha Vijayaknth
Piremalatha Vijayaknth

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இரண்டு தினங்களுக்கு முன் காலமான செய்தி தமிழ்நாடு மக்களையே சோகத்தில் மூழ்கடித்து உள்ள நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அவரது மகன் விஜய பிரபாகரன் விஜயகாந்தின் உடல் நிலை பின்னடைவு பற்றி கூறி இருந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியபடி இருந்தார். தற்போது அவர் மறைவையொட்டி அடுத்து யாராக இருப்பார் என்ற தகவல் தொண்டர்கள் மத்தியில் வந்தது.


கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் நாளடைவில் நடக்க முடியாமலும், வாய் பேச முடியாமலும் இருந்து வந்தார். குறிப்பாக அடுத்தவர்களின் தயவின்றி எந்த வித செயலும் செய்ய முடியாமல் இருந்தார் அதன் பின்னர் வெளியில் கூட வர முடியாத நிலை இருந்தது. அவர் எப்படியாவது நல்ல உடல் நலத்துடன் மீண்டு வருவார் என அவரது ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற விழாவிற்கு தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில் முழுமையாக அவரால் செய்லபடமுடியாமல் இருந்து வந்ததால் அவரால் அவரது கட்சி கூட்டத்திற்கு பங்கேற்க முடியாமல் போனது இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த ரசிகர்களும், தொண்டர்களும் கேப்டன் மீண்டு வருவார் என எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விஜயகாந்த் உடல் நல பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியது அவரது மறைவை காண தமிழக மக்கள் சுமார் 15 லட்சம் பேர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி திரையுலகில் விஜயகாந்தின் பங்களிப்பை எடுத்துரைத்து இரங்கல் தெரிவித்தனர். மக்கள் அனைவரும் கருப்பு எம்ஜிஆர் என செல்லமாக அழைத்துவந்தனர். 

விஜயகாந்த் மறைவுக்கு பின் அவரது கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொறுப்பை யார் எடுப்பார் என கேள்வி வந்தது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தேமுதிகவின் பொது செயலாளராக பிரேமலதா பொறுப்பை ஏற்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் வந்த போதும் கூட தொண்டர்கள் அவரை பார்த்து கண்கலங்கினர், அவருக்கு ஓய்வு கொடுங்கள் அவரை இப்படி பார்க்க முடியவில்லை என கூறினர். அடுத்த ஒரே வாரம் கழித்து விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டார் என செய்து வெளியில் வர அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர தொடங்கியது.

இப்பொது அவர் மறைந்த பிறகு பிரேமலதா அக்கட்சிக்கு தலைமை தங்குவார் என சில தகவல் வந்தது. ஆனால், வியாகாந்தின் இடத்தை அவரது மனைவி பிடிப்பதால் அவருக்கு மக்கள் வாய்ப்பு அதிகரிக்கும் என சொல்ல முடியாது எனவே அவர் அதற்கு சரி பட மாட்டார் என மிகப்பெரிய கேள்வி எழுந்தது. இதனால் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனைமுன்னிலை படுத்தினால் எதிர்காலம் சிறப்பாக இருக்க கூடும் என கூறப்டுகிர்து. ஏற்கனவே இளைய மகன் தமிழ் சினிமாவில் நடித்திருந்தார், தற்போது மூத்த மகன் கட்சியில் இணைந்து செயல்படுவார் என்வும் விஜயகாந்த் தோற்றம் விஜய பிரபாகரனிடம் தெரிவதாக தேமுதிக தொண்டர்கள் கூறுகின்றனர்.