24 special

ஒத்தை பஸ்ஸ்டாண்ட் திமுக கோட்டையை சிதறவிட்ட பின்னணி.... அறிக்கையை பார்த்ததும் ஆடிப்போன மு.க குடும்பம்....

kilambakkam, mkstalin
kilambakkam, mkstalin

சென்னையில் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்திருப்பது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து தமிழக அரசு கழக பேருந்துகள் அனைத்தும் இங்கு  இருந்து சென்றதையும் என்பதை தெரிவித்திருந்தார் அதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு மக்கள் கடுமையாக தங்களது அதிருப்திகளை தெரிவித்து வந்தனர் ஏனென்றால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வண்டலூருக்கு அடுத்து அமைந்துள்ளது ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையமோ சென்னையின் மத்தியில் அமைந்து இருந்தது இதனால் பல பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் கோயம்பேடு மிகவும் எளிதான போக்குவரத்தாகவும்  எளிதாக அடையாளம் காணக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மிகவும் தொலைவில் அந்த பேருந்து நிலையத்தை அடைவதற்கே நாங்கள் ஒரு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும் மெட்ரோ மற்றும் போதிய பேருந்து வசதிகளும் கிளாம்பாக்கம் செய்வதற்கு இல்லை அப்படி காத்திருந்து பேருந்தில் சென்றாலும் பல கிலோமீட்டர் தொலைவிற்கு நாங்கள் நடந்து சென்று பேருந்து நிலையத்தை அடைய வேண்டியுள்ளது என்று மக்கள் அதிருப்தி தெரிவித்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். 


அதே சமயத்தில் ஆம்னி பேருந்துகள் இனி சென்னை நகருக்குள் வந்து மக்களை ஏற்றி செல்லக்கூடாது என்றும் கிளாம்பக்கத்தில் இருந்து ஏற்றியும் இறக்கியும் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டது ஆனால் இதற்கு ஆம்னி பேருந்துகளில் உரிமையாளர்கள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது கிளம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு குறைந்த இடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் எங்களிடம் இருக்கும் பேருந்துகளோ ஆயிரத்திற்கும் மேல் அவை அனைத்தையும் எங்களால் எப்படி அங்கு நிறுத்த முடியும் மக்கள் வந்து ஏறுவதற்கு வசதியாகவும் உங்களால் பேருந்துகளை அங்கு நிறுத்த முடியவில்லை  அதனால் பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய  வசதிகளை எங்களுக்கு செய்து தர வேண்டும் அப்பொழுது மட்டுமே எங்களால் கிளாமக்கத்திற்கு வர முடியும் என்று கூறியிருந்தனர். இது மட்டும் இன்றி கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி அமைந்திருந்த கடைகள் ஆட்டோ ஓட்டுநர்கள் உணவு விடுதிகள் அனைத்துமே பெரும் வாழ்வாதாரத்தை இழந்தது ஒரு நாள் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்த எங்களால் இன்று அதை அடைவதற்கு பெரிதும் சிரமப்படுகிறோம் என்று ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களது வருமான இழப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் இரவு முழுவதும் மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் தங்கியிருக்கும் அவ்வளவு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. மேலும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்வதற்காக இரவு 10 மணிக்கு வந்தேன் ஆனால் தற்பொழுது 3 மணி ஆகிறது இதுவரையும் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்கு பேருந்துகள் இல்லை இது குறித்து காவல் அதிகாரியிடம் கூறினால் கூட ஓடிப்போய் ஏறு வர்ற பஸ்ல ஏறிக்கோ என்று கூறுகிறார்கள் 300 பஸ் விட்டோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவை அனைத்தும் எங்கு ஓடுகிறது என்றே தெரியவில்லை! 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளே இல்லை! இப்படி ஒரு சூழ்நிலையில் நாங்கள் உழைத்து வீட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் இங்கு இருப்பதைவிட நாட்டை விட்டு ஓடிவிடலாம்! என்று ஒரு பயணி தனது வேதனையை தெரிவித்திருக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும் அறிவாலயத்திற்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கையின்படி கிளம்பாக்கம் தான் சென்னை  கோட்டை என்பதை உடைக்க துவங்கிவிட்டது எனவும் வேறு தகவல்கள் கசிகின்றன.