சும்மாவா சொன்னாங்க கல்யாண செஞ்சு பாரு வீட்டை கட்டிப் பாருனு! பெற்றோர்களின் முக்கிய கடமையாக தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது உள்ளது. அதிலும் பெண் குழந்தையாக பிறந்து விட்டால் 21 வயது முதல் 23 வயதுக்குள் எப்படியாவது திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திலும் தற்போதைய சமுதாயம் அவர்களை தள்ளி வருகிறது இருப்பினும் சில பகுதிகளில் இது போன்ற கலாச்சாரம் மற்றும் என் மகள் விருப்பப்படும் பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனப்பான்மையைக் கொண்ட பெற்றவர்களும் ஆங்காங்கே இருக்கின்றனர். அதே சமயத்தில் ஆண் என்றால் 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் முடிவை யோசித்து அதற்கான சேமிப்பையும் செய்ய துவங்கி விடுகின்றனர்.
இதில் தனது துணைவியரை தேர்ந்தெடுத்து அதற்கான செலவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, அந்த செலவுகளை கணக்கு போட்டு பார்த்தால் திருமணம் என்பதை செய்து கொள்ளாமல் அந்த பணத்தை நாம் கையில் வைத்துக் கொண்டாலே பெரிய தொகை நம்மிடம் இருக்கும் என்ற அளவிற்கு அதிக அளவிலான தொகை திருமணங்களில் செலவிடப்படுகிறது அதிலும் குறிப்பாக தற்போது செய்யப்படும் திருமணங்கள் அனைத்துமே ஆடம்பரமாகவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. முன்பெல்லாம் உடுத்தும் உடைகளிலும் உணவுகளிலும் மட்டுமே அதிக பணங்கள் ஒரு திருமணத்தில் செலவிடப்பட்டு வந்தது ஆனால் இப்பொழுது மேக்கப் செலவிற்கும் போட்டோ சூட்டுக்குமே அதிக அளவிலான செலவுகள் ஒதுக்கி வைக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருமண செலவில் பாதி இவ்விரண்டிற்குமே செல்வதாக பல தரப்பில் கூறப்படுகிறது. போட்டோ சூட் என்பதை எடுத்துக் கொண்டால் திருமணத்திற்கு முன்பு ஒரு போட்டோ சூட் திருமணத்தன்று ஒரு போட்டோ சூட் அதற்குப் பிறகு ஒரு போட்டோ சூட் என மூன்று நிலைகளில் போட்டோ சூட்டுகள் எடுக்கப்படுகிறது இந்த மூன்று நிலைகளும் தற்போது மிகவும் பிரபலமாகவும் சினிமா படத்தை எடுப்பது போன்று சினிமாவில் வரும் பாடல்களைப் போன்று நடனமாடி பல இடங்களுக்கு சென்று போட்டோ எடுத்து அதனை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதிக பாலோசை பெற வேண்டும் என்ற மோகத்தில் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. முன்பெல்லாம் ஏன் நமது அம்மா அப்பாவின் கல்யாண போட்டோக்கள் கூட சில வீட்டில் இல்லாமல் இருந்திருக்கும், ஆனால் இன்றைய சமுதாயத்தினரின் கல்யாணம் என்று வந்துவிட்டால் ப்ரீ வெட்டிங் சூட் எப்பொழுது சொல்லலாம் என்று தான் கேட்பார்கள் அந்த பிரி வெட்டிங் ஷூட்டும் ஒவ்வொரு விதமாக எடுக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இதுபோன்ற போட்டோ ஷூட்டாலே எடுப்பதற்காக பிரத்தியேக இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் நேர கணக்குப்படி வாடகைக்கு விடப்படுகிறது.
அப்படி வித்தியாசமாக எடுக்கப்படும் ஒவ்வொரு போட்டோக்களில் சில போட்டோக்கள் மட்டுமே சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பகிரப்படும் அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளம் முழுவதும் இரண்டு டாக்டர்கள் திருமணத்திற்காக ப்ரீ வெட்டிங் சூட்டை தனது அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இடத்தில் வைத்துள்ளார்கள் அதுவும் இருவரும் அறுவை சிகிச்சை செய்வது போன்ற நடிப்பில் ஈடுபட்டு அதனையும் போட்டோ எடுப்பதற்கு போட்டோகிராபர்கள் நிற்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்துமே தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது எப்படி எப்படி எல்லாம் போட்டோ எடுக்கிறார்கள் மழையில் நனைந்த மாதிரி சமையல் செய்யும் மாதிரி கடத்தலில் ஈடுபடும் பெண்ணை காப்பாற்றுவது போன்று கூட பிரிவைட்டிங் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு கர்நாடகாவில் தற்போது அறுவை சிகிச்சையில் ஈடுபடும் இரண்டு மருத்துவர்களின் போட்டோ இணையத்தில் வைரலானது, இதனைத் தொடர்ந்து ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்டை நடத்திய அந்த மருத்துவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.