கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவிற்கு கலந்து கொண்டு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வரவேற்புதான் தமிழக அரசியலை உலுக்கியுள்ளது. தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை பசும்பொன் சம்பவம் அப்படியே காட்டிவிட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு குருபூஜைக்கு மரியாதை செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பும், அங்கு அவருக்கு கிடைத்த எதிர்ப்பும் அதிமுகவை இனி தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வளர விடாது என பல விமர்சனங்கள் எழுந்தது இது மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்திலிருந்து சில ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு
அதிமுகவை தனது சுயநலத்திற்காக பிரித்துக் கொண்டார் என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக எதிர்வலைகள் கடுமையாக இருந்துவருவதை சிலர் கூறியும் அதனை கேட்காமல் எடப்பாடி பழனிசாமி குருபூஜைக்கு சென்றதுதான் இத்தைகைய சம்பவத்திற்கு காரணம் எனக்கூறுகின்றனர் சில தென் மாவட்ட முக்கிய புள்ளிகள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முக்குலத்தோர் சமுதாயம் திரும்பியதும், குருபூஜையில் ஏற்பட்ட சம்பவம் காரணமாகவும் குருபூஜை முடிந்த அடுத்த நாள் எடப்பாடி பழனிசாமி மிகவும் அப்செட் ஆக இருந்தாராம், என்னதான் நாம் தென்மாவட்டங்களை கவர பல வேலைகள் செய்தாலும், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு போன்ற ஆட்களை வைத்துக்கொண்டு தென் மாவட்டங்களை கவர நினைத்தாலும் நமக்கு இப்படி அடிமேல் அடி விழுகிறது என எடப்பாடி தனது நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக தெரிகிறது.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான ஒருவர் இனி அடுத்து முக்குலத்தோர் சமுதாயத்தில் இருந்து ஒரு சிலரை அதிமுகவிற்கு இழுக்கலாம், அதுவும் பிற கட்சிகளில் இருந்தாலும் சரி! கட்சியை விட்டு விலகி இருந்தாலும் சரி! அவர்கள் உள்ளே வருவதனால் நம் மீது இருக்கக்கூடிய இந்த கரையை துடைக்க முடியும் என ஐடியா கொடுத்ததன் விளைவாக தற்பொழுது பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவாவை அணுகியுள்ளார்களாம் எடப்பாடி தரப்பு. திருச்சி சூர்யா சிவா ஏற்கனவே சில சச்சரவுகள் காரணமாக பாஜகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார், இதன் காரணமாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த திருச்சி சூர்யா சிவாவை அழைத்து எடப்பாடி தரப்பு பேசியிருக்கிறது, அதன் பின்னர் வரும் ஐந்தாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைவதற்கு சூர்யா சிவா ஒப்புதல் அளித்து விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அடுத்து வரும் சில நாட்களில் குறிப்பாக டிசம்பருக்கு முன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்களை அதிமுகவிற்கு இழுப்பது மட்டுமல்லாமல் சில தென் மாவட்ட பகுதிகளுக்கு வேறு சுற்றுப்பயணம் திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தினர் தற்பொழுது பாஜக பக்கம் மெல்ல தங்களது ஆதரவு கரங்களை நீட்டி வருவதும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கோவத்தை ஏற்படுத்தி உள்ளது, இதன் காரணமாகத்தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூரியா சிவாவை அதிமுகவிற்கு இழுக்க எடப்பாடி தரப்பு முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. அதிமுகவில் சூர்யா சிவா இணைந்ததற்கு பிறகு அவரை வைத்து பாஜகவை பற்றி குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்கள் கூறுவது போன்ற பல வேலைகளை செய்வதற்கு எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருப்பதாகவும் சில செய்திகளை கசிய விடுகின்றனர் அதிமுக தரப்பினர்
.