24 special

வெடித்த அண்ணன் தங்கை பனிப்போர்...! உடனடியாக முதலமைச்சர் செய்த காரியம்...!

Kanimozhi, mkstalin
Kanimozhi, mkstalin

திமுக கட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி இடையேயான பிரச்சனைகள் சமீப காலமாக அதிகளவில் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


ஏனென்றால் திமுக சார்பில் நடத்தப்படும்  நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு எம்பி  கனிமொழியை அழைக்கப்படவில்லை என்ற மன வருத்தம் கனிமொழிக்கு இருந்து வந்தது, இதற்கெல்லாம் உச்சகட்டமாக மதுரையில் நடைபெற்ற கலைஞரின் நூலக திறப்பு விழாவிற்கு கூட எம்பி கனிமொழிக்கு முறையாக பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுக்கவில்லை என்ற செய்திகள் வெளியாகின. அதன் காரணமாக அவர் அந்த விழாவில் கலந்துகொள்ளவும் இல்லை...!

இது மட்டும் அல்லாமல் இந்த சம்பவத்திற்கு பிறகு முதல்வர் மீது கடும் அதிருப்தியில் கனிமொழி இருந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் வருகின்ற தேர்தலுக்குப் பிறகு திமுக கட்சி இரண்டு அணியாக உடையும் என்ற அரசியல் விமர்சனங்களும் எழுந்தது, கனிமொழிக்கு மூத்த தலைவர்களின் ஆதரவு இருப்பதால் கனிமொழி தலைமை என தனியாக பிரிய வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளிவந்தது.

இப்படியே விட்டால் கட்சி இரண்டாகப் போய்விடும் என்ற காரணத்தினால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தானாக  வந்து கனிமொழியின் அதிருப்தியை போக்கும் விதமாக அவருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். 

இதன் காரணமாக கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி  வினாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு கலைஞர் 100 வினாடி வினா என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி இந்த விழாவை தலைமை ஏற்று நடத்த அறிவாலயம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் இந்த போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும்  இணைய வழியில் நடக்கும் இந்த வினாடி வினா போட்டிக்காக குறிப்பிட்டு இணையதள வெப்சைட்  உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எம்பி கனிமொழியின் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் மகளிர் அணி சார்பில் கழகத் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நூறு வினாடி வினா போட்டி நடைபெற இருப்பதாக' கூறியுள்ளார். மேலும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஆன செப்டம்பர் 15 அன்று நடைபெற உள்ள இந்த வினாடி வினா போட்டிக்கு பங்கு பெற அனைவரும் தயாராகுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் தனது தங்கை கனிமொழிக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் கனிமொழியின் முயற்சியை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இது மூலம் இதுவரை ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செயல்படுவதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி சார்பில் நடைபெற இருக்கும் இந்த வினாடி வினா போட்டியில் பத்தாயிரம் கேள்விகள் கேட்கப்படுவதாகவும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்கள் என இரு பிரிவுகளாக பிரித்து போட்டியை நடத்த இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளனர் 

ஏற்கனவே மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டங்கள் கருத்துக்கணிப்புகள் போன்றவை நடைபெற்று வரும் நிலையில் இவை அனைத்தும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தான் நடத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள நிலையில் முதல்வரின் இந்த முயற்சி கூட அதை மையப்படுத்தி தான் இருக்கிறது என்று அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

இது மட்டும் இல்லாமல் இதன் பின்னணியாக முதல்வர் கனிமொழியை பாராட்டியது கனிமொழி தரப்பினரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காகவும், கனிமொழி தலைமையில் தனியாக ஒரு அணி உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவும்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.