24 special

அனைவரின் பிராத்தனைக்கு கிடைத்த பலன் வீடு திரும்பிய கேப்டன்! நடந்தது என்ன தெரியுமா?

vijayakanth, pramaladha
vijayakanth, pramaladha

புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கை பெற்றிருந்த விஜயகாந்த் தமிழக அரசியல்வாதியும் கூட, தேமுதிக என்ற கட்சியின் தலைவராக அவர் முக்கியத்துவம் வாய்ந்தவர். திரை உலகத்தில் இவர் குறித்து கேட்கப்படும் போதெல்லாம் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர், அவர் நடிக்கும் படங்களை இடம் பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகள், இவரின் படப்பிடிப்பிற்கு யார் வந்தாலும் உணவு உண்ணாமல் திரும்ப முடியாது அந்த அளவிற்கு அனைவருக்கும் உணவளிப்பவர், உதவி என்று தன்னை நாடி வருபவருக்கு எதுவும் இல்லை என கூறாதவர், என்று பலவாறு நடிகர் விஜயகாந்தை பாராட்டியுள்ளனர். 


இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் திரை உலகில் இருந்து மொத்தமாக விலகி வந்த விஜயகாந்த் அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார் இருப்பினும் சமீப காலமாக அவரது உடல்நிலை என்பது மிகவும் மோசமாக இருந்து கொண்டே உள்ளது சில ஆண்டுகளாகவே உடல்நிலை குறைவிற்காக தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் அது மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கு சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து தொடர் சிகிச்சையை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை சில நேரங்களில் சீராகவும் சில நேரங்களில் மோசமாகவும் உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சளி அதிகமாக இருக்கிற காரணத்தினால் நுரையீரல் சிகிச்சைக்கான உதவிகளும் தேவைப்படுகிறது என்றும் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையில் அவர் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விஜயகாந்தின் மனைவி, தலைவர் உடல் நலம் தேறி வருகிறார் விரைவில் உங்கள் அனைவருக்கும் நல்ல செய்தி கிடைக்கும் அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை விஜய்காந்த் சிகிச்சை அனைத்தும் பெற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்பது குறித்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி பல நாட்கள் அல்ல மாதங்களாக வருடங்களாக வெளிநாடு, உள்நாடு என அலைந்து திரிந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ள செய்தி அவரது கட்சியினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது அது மட்டும் இன்றி விஜயகாந்தின் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இப்படி விஜயகாந்த் பல சிரமங்களை தாண்டி குணமடைந்து திரும்பி இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் இதுவரை பலருக்கு செய்த உதவிகளே! தன்னை தேடி வரும் அனைவருக்கும் உணவு அளித்ததுமே! என இந்த காரணங்களால் தான் தற்பொழுது அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் அவர் செய்த உதவிகள்தான் அவரை மரணப்படுக்கையில் இருந்து மீட்டு கொண்டுவந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.மேலும் தேமுதிக தரப்பில் இருந்து விரைவில் மாநில நிர்வாகி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதில் விஜயகாந்த் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.