24 special

வாட்டாள் நாகராஜ்ஜை தெறிக்கவிட்ட கேப்டன்... நின்னு பேசும் வரலாறு....

vijayakanth, vatal nagaraj
vijayakanth, vatal nagaraj

கர்நாடகாவை சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி தான் வாட்டாள் மடப்பா நாகராஜ், இவர் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், மேலும் கன்னட சாலுவாலி வாடல் அக்ஷாவின் நிறுவனரும் தலைவருமான இவர் அவ்வப்போது அரசியல் சார்ந்த போராட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டவர். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக நடிகர் சங்கம் கர்நாடகாவிற்கு எதிராக காவிரி போராட்டத்தை முன்வைத்த பொழுது பிரபல தென்னிந்திய நடிகர் சத்தியராஜ் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கண்டனங்களை தெரிவித்தார். அதோடு 2018ல் கோவாவில் இருந்து பாயும் மண்டோவின் ஆற்றில் இருந்து நீர் பங்கிடையும் கேட்டு புதிய போராட்டத்தையும் நடத்தினார். 


இந்த வரிசையிலேயே சமீபத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மழையின்றி தவித்த பொழுது கர்நாடகாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திறக்கப்பட வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு ஏற்றார் போல் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மையும் கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பித்தது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சார்பு ஆர்வலர்கள் கர்நாடகாவில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் பந்த் நடத்தினர் அப்பொழுது பர்தா அணிந்து கொண்டு தலையில் காலி குடத்துடன் வீட்டின் வெளியே வந்து  நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், மேலும் கர்நாடக எல்லையான ஓசூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டவர்.

இப்படி கர்நாடகா முழுவதும் புதிய புதிய போராட்டங்களை நடத்தி மக்களின் கவனத்தை ஈட்டவர் இந்த வாட்டாள் நாகராஜ்! இவ்வளவு ஏன் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த்தே வாட்டாள் நாகராஜ் என்றால் கர்நாடகாவில் பேச பயப்படுவார்.அப்படி ரஜினியே பயப்பட்ட வாட்டாள் நாகராஜை விஜயகாந்த் ஓடவிட்ட சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கேப்டன் விஜயகாந்த் நடித்த படப்பிடிப்பு ஒன்று கர்நாடகத்தில் நடந்துள்ளது, அப்போது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆட்கள் போராட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு  ஏற்படுத்த வந்தார்களாம், அப்போது பேசிப்பார்த்து பயனில்லாத காரணத்தினால் விஜயகாந்த் கோபமடைந்தாராம். 

கோபமடைந்த விஜயகாந்த் தனது வேட்டியை மடித்து கட்டி  'என்னடா சொல்றான் அவன்! என்று கோபத்துடன் தனது காரின் பின்புறத்தில் இருந்த பெரிய ராடு ஒன்றை எடுத்து வாட்டாள் நாகராஜன் நோக்கி வாடா நீ வாடா என்று அவரை நோக்கி சென்றுள்ளார் கேப்டன்! மற்றோர்கள் அதனை அதைப் பார்த்து அரண்டு போய் நின்றார்களாம்.களத்தில் முழுவதுமாக சண்டைக்கு இறங்கி விட்டாராம் விஜயகாந்த் அதை பார்த்து தெரிந்து ஓடி விட்டனர் வாட்டாள் நாகராஜும் அவர் கூட இருந்த கூட்டங்களும்! அந்த ஹோட்டலில் விஜயகாந்த் இருக்கிறார் என்று தெரிந்து தான் இவர்கள் வந்துள்ளனர் வேணும் என்றே சண்டைக்கு வந்தவர்களுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுத்தார் என்று திரையுலகில் சினிமா பத்திரிக்கையாளர்கள் சம்பவத்தை கூறுகின்றனர்.இப்படி தமிழ் தமிழன் என்று பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டி மற்ற மாநிலத்திற்கு சென்று விஜயகாந்த் நடந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக உலா வருகிறது.