தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இயக்குனர் நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக அறியப்படும் ராகவாலாரன்ஸ் ராகவேந்திரா ஸ்வாமி மீது கொண்ட பக்தியால் இந்து மதத்திற்கு மாறி தனது பெயரை லாரன்ஸில் இருந்து ராகவால் லாரன்ஸ் ஆக மாற்றிக் கொண்டார். மேலும் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு நடன இயக்குனராக வலம் வந்த இவர், பார்த்தேன் ரசித்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்குப் பிறகு உன்னைக் கொடு என்னை தருவேன் என தமிழில் சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களிலும் நடித்த ராகவா லாரன்ஸ் பிறகு தென்றல், திருமலை, மாஸ் என்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார்.
இதனை அடுத்து ராகவா லாரன்ஸை ஒரு முன்னணி கதாநாயகனாக மாற்றிய திரைப்படம் முனி! இந்த திரைப்படம் ஆரம்பத்தில் காமெடி காட்சியாகவும் பேய்க்கு பயந்த சுபாவத்திலும் நடித்த ராகவா லாரன்ஸ் பிறகு ஆவி புகுந்ததும் ஒவ்வொருவரையும் பறக்கவிடும் காட்சிகள் பலரால் ரசிக்கப்பட்டது. இதனை அடுத்து பாண்டி, ராஜாதி ராஜா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என தொடர்ச்சியாக குடும்பப் பாங்கான மற்றும் காமெடி கலந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக உருவெடுத்தார். மேலும் காஞ்சனா ஒன்று இரண்டு மூன்று என தொடர்ச்சியாக மூன்று பாகங்களை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு பேய் படத்திற்கான ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இப்படி இவர் சினிமாவை எந்த அளவிற்கு தன்னை வளர்த்துக் கொள்கிறாரோ அதேபோன்று தன்னை சுற்றி இருப்பவரையும் தன்னுடன் சேர்ந்து வளர்க்கும் சுபாவத்தை தன்னுள் கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார். மேலும் ராகவேந்திரா சுவாமிக்கு என்று தனி கோவிலையும் கட்டி வணங்கி வரும் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை கண்டார். மேலும், நடனத்தால் மற்றவர்களை ஈர்ப்பது போல தன் உதவும் குணத்தால் மக்கள் பலரையும் தன்னுடைய ரசிகர்களாக மாற்றிக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் கூட, சேவையே கடவுள் என்னும் புதிய பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி மாற்றம் என்ற பெயரில் மாற்றத்தை தரும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அதோடு இந்த அறக்கட்டளை தொடங்கி அதன் முதல் பணியாக 10 ஊருக்கு தனது குழுவுடன் சென்று 10 விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டரை வழங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸிங் இந்த நடவடிக்கைகளுக்கு பல பாராட்டுகள் குவிந்து வருகிற நிலையில் இதில் தன்னுடைய பங்களிப்பியும் செலுத்த வேண்டும் என்று நினைத்த நடிகர் எஸ் ஜே சூர்யா மாற்றத்தில் என்னையும் இனைத்துக் கொள்ளுங்கள் என்ற வகையில் ஒரு புதிய டிராக்டரை வாங்கி அதனை அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும் நீங்களே வந்து உங்கள் கையாலே கொடுங்கள் என எஸ் ஜே சூர்யாவையும் அழைத்துக் கொண்டு சென்று ராகவா லாரன்ஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை சேர்ந்த விவசாயிக்கு சொந்த செலவில் அந்த டிராக்டரை வழங்கி வந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஏனென்றால் முன்னணி நடிகை நடிகர்கள் பலர் தன் தரப்பில் தனக்கென்று பல சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் ஆனால் அவர்களின் பெரும்பாலானோர் பேரிடர் காலங்களில் மட்டுமே உதவி செய்யும் வழக்கத்தைக் கொண்டவர்கள் மத்தியில் இதுவரை சம்பாதித்தோம் இனிமேல் செலவு செய்வோம் அதுவும் மக்களுக்காக செலவு செய்வோம் என ஒரு அறக்கட்டளையை தொடங்கி அந்த அறக்கட்டளை மூலம் நேரடியாகவே மக்களை சந்தித்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ் அவருடன் தற்போது எஸ் ஜே சூர்யாவும் புதிதாக இணைந்துள்ளது சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.