தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுனின் மகள்தான் ஐஸ்வர்யா அர்ஜுன்!! இவரும் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐஸ்வர்யா அர்ஜுனின் மகளுக்கு உமாபதி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. உமாபதி என்பவர் யார் என்று பார்த்தால் அவர் திரைப்படங்களில் காமெடி ஆக்டராக நடித்து வரும் ராமையாவின் மகன்தான்!! உமா பதியும் திரைப்படங்களில் நடித்து வரும் ஆக்டர் தான். இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும், உமாபதி ராமையா அவர்களுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்து விட்டது.
மேலும் இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அது குறித்த புகைப்படங்களும் இணையங்களில் வைரலாகி அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி படும் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர்கள் இருவரும் நடனமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி நிறைய லைக்குகளை பெற்று வந்தது. இவ்வாறு திருமண வேலைகளில் மிகவும் பிசியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்து வரும் உமாபதி ராமையாவிற்கு பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்.
உமாபதி ராமையா ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பித்தலா மாத்தி!! இந்த திரைப்படம் ஆனது நினைத்த அளவிற்கு வெற்றியை கொடுக்காமல் படும் பிளாப் ஆகி தோல்வி அடைந்து விட்டது. என்னைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவரின் கருத்துக்களை மிகவும் கவலையுடன் கூறியுள்ளார். அது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது என்னவென்றால்..
திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர்களும், உமாபதியும் முற்றிலுமாக புறக்கணித்து வந்ததாக பித்தல மாத்தி திரைப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது எனவும் கவலையுடன் கூறியுள்ளார். படத்தின் மீது விருப்பமே இல்லாமல் அனைவரும் செயல்பட்டு வந்ததாகவும் அவர்களை சமாதானப்படுத்தி வந்ததாகவும் கூறி இருக்கிறார். மேலும் திரையரங்குகளில் ஆக்கிரமிப்புகள் குறைவாக இருந்ததால் திரைப்படத்தின் சோக்கல் ரத்து செய்யப்பட்டு பிளாப் ஆகிவிட்டது என கவலையுடன் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் குறித்த எந்த ஒரு பேனர்கள் எதுவுமே வைக்கப்படாமல் இருந்ததும் இந்த திரைப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாகும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நட்சத்திரங்கள் கூட இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு விளம்பரமும் அவர்களாகவே செய்யவில்லை என வருத்தம் அடைந்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் ஹீரோவாக நடித்த உமாபதி ராமையாவே இந்தத் திரைப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடவில்லை. மேலும் அவர் தனது திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது என கூறி கவலையை வெளிக்காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து பித்தல மாத்தி திரைப்படம் ஆனது எப்படியாவது வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து போராடப் போவதாகவும், அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் பார்ப்பவர்களுக்கு திரும்பத் திரும்ப பார்க்கும் அளவிற்கு பிடித்து விடும் என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது