24 special

திமுக கோட்டையான திருத்துறைப்பூண்டியில் அண்ணாமலை வந்ததால் நடந்த மாற்றம்....

mk stalin, annamalai
mk stalin, annamalai

'என் மண் என் மக்கள்' யாத்திரையை தற்போது காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மையமாக நடந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று பட்டுக்கோட்டை, பேராவூரணி, தம்பிக்கோட்டை பகுதிகளில் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கு பெற்றார். அதனை தொடர்ந்து இன்று திருத்துறைப்பூண்டி, வேதாரணியம், வாய்மேடு, கரியாப்பட்டினம் போன்ற பகுதிகளில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். இந்த நிலையில் திமுகவின் கோட்டையான திருத்துறைப்பூண்டியில் அண்ணாமலை வருகைய ஒட்டி நகராட்சி நிர்வாகம் செய்த காரியம் தான் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் இன்று அண்ணாமலை வருவதால் அங்குள்ள டிராபிக் போலீசார் சார்பில் பள்ளிகளுக்கு சென்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். அண்ணாமலை வருவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் மேலும் அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் அண்ணாமலை வருகிறார் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கை பறந்ததாம் அதன் காரணமாக இன்று மட்டும் பள்ளி வழக்கமாக விடும் நேரம் நான்கு மணிக்கு முன்னதாக மூன்று மணிக்கே பள்ளிகளை விட்டு மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டியில் இருப்பது சிறிய கடைத்தெரு தான், ஆனால் அண்ணாமலை வந்தால் மற்ற இடங்களைப் போல் இன்றும் கூட்டம் அதிகமாகிவிடும். பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அனைத்தும் தடைப்பட்டுவிடும், பாஜகவிற்கு முன்பெல்லாம் இருந்தது போல் கூட்டம் கம்மியாக இருக்காது வருவது அண்ணாமலை. அதனால் கூட்டமே கண்டிப்பாக பெரிய அளவில் இருக்கும். தாக்குப் பிடிக்க முடியாது என இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக திருத்துறைப்பூண்டி கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து திருத்துறைப்பூண்டிவாசிகள் சிலர் பேசிய பொழுது 

கூறியதாவது, உண்மைதாங்க முன்னாடி எல்லாம் பாஜக கூட்டம் என்றால், தெற்கு வீதியில் ஒரு பத்து பேர் போவாங்க ஆனா இப்ப பாஜக கூட்டம் என்றால் ஊரே திரண்டு வருகிற அளவிற்கு இருக்கு நல்லா வளர்ந்திருச்சு பாஜக' என திருத்துறைப்பூண்டியில் இருக்கக்கூடிய உள்ளூர் வாசிகள் நம்மிடம் கூறினர். இது குறித்து பாஜகவினரிடம் கேட்ட பொழுது 'நாங்கள் எதையும் செய்யவில்லை அண்ணாமலை வருகிறார் என அறிவிப்பை மட்டும்தான் கொடுத்தோம்! மற்றதெல்லாம் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகமே பார்த்துக்கொண்டது. அண்ணாமலை அந்த ஊரில் இறங்கும் நேரத்தை மட்டும் நாங்கள் அறிவித்தோம். ஆனால் ஸ்கூலுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே பெல் அடித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது, போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் ரோடு ஓரங்களில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டூவீலர்களை அகற்றியது இதெல்லாம் எங்களுக்கு எதுவுமே தெரியாது அண்ணாமலை வருகிறார் என்றவுடன் அந்த மாற்றம் நடந்தேறி விட்டது மற்றபடி எதுவும் நாங்கள் செய்யவில்லை' என்றனர். 

திமுக கோட்டையான திருத்துறைப்பூண்டியிலே இந்த மாற்றம் என்றால் மற்ற பகுதிகளில் கேட்கவா வேண்டும் என தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் யாத்திரை அடுத்தபடியாக சென்ற வேதாரண்யத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம்  கூடியதாம். வேதாரணியத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் வழி நெடுகிலும் அண்ணாமலையை பார்க்க மக்கள் ஆர்வமாய் நின்றதும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் எனப்படும் 18 வயது முதல் 22 வயதிலான இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் அண்ணாமலையை பார்க்க குவிந்ததும் அவருடன் செல்பி எடுக்க போட்டி போட்டுக் கொண்டு நின்றது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.