காவேரி மருத்துவமனையில் இருந்துகொண்டு நீதிமன்றம் மூலம் அமலாக்கத்துறையிடம் போராடும் செந்தில்பாலாஜியின் தம்பி விவகாரத்தில் வருமானவரித்துறை இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை முதலில் ரெட்டில் இறங்கியது. அந்த சோதனையின் பொழுது செந்தில் பாலாஜிக்கும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் பல ஆவணங்கள் சிக்கியதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் தற்போது வருமானவரித்துறையிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சில வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சீல் வைத்துவிட்டு சென்றனர். இதற்குப் பிறகு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நினைத்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜியின் தரப்பினருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் அமலாக்கத்துறை இறங்கியது. அமலாக்கத் துறையும் தன் தரப்பிற்கு பல ஆவணங்களை சோதனை செய்ததில் செந்தில்பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் பல கோப்புகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு ரெய்டுகளாலே தனது பதவியையும் திமுகவினர் மத்தியில் இருந்த செல்வாக்கையும் இழந்த அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படியாவது நீதிமன்றம் மூலமாக அமலாக்கத்துறையை தன்னை நெருங்கவிடாத அளவிற்கு பல ஏற்பாடுகளை செய்துவருகிறார். செந்தில்பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையிடம் போராடும் வேளையில் வருமானவரித்துறை மறுபடியும் கரூரில் இறங்கி முன்பு சீல் வைத்த பல இடங்களில் அதிரடி சோதனை செய்தது. இந்த சோதனையிலும் முன்பு பெற்ற ஆவணங்களை விட அதிகப்படியான ஆதாரங்கள் ஐடி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் இதில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு சம்பந்தப்பட்ட பல ஆதாரங்கள் சிக்கியதாகவும் ஐ டி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முன்னதாக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையிலும் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு எதிரான ஆதாரங்கள், அவர் சம்பந்தப்பட்ட பல பண பரிமாற்ற கோப்புகள் கிடைத்ததாகவும் கூறி விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி இருந்தது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதுமே செந்தில் பாலாஜி சகோதரர் தலைமறைவாகிவிட்டார் என பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வெளிநாடுகளுக்கு சென்று தப்பித்து ஓடி விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டிசையும் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளதாகவும், அவரை கண்டவுடன் கைது செய்ய தீவிரமாக இருப்பதாகவும் தவகல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமலாக்கத்துறை இரண்டு சம்மன்களை அனுப்பி உள்ள நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளும் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதாவது செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வருகின்ற 27 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே வருமானவரித்துறை இதற்கு முன்பு இரண்டு சம்மன்களை செந்தில் பாலாஜியின் சகோரர் அசோக் குமார் நேரில் ஆஜராகும் படி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது அதற்கு எதற்குமே விளக்கம் அளிக்காமல் அசோக் குமார் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதனால் இதற்கு மேலும் பொறுக்க முடியாது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறேன் என்று விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் ஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மன்னிற்கு எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருப்பது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது அதனாலயே தற்போது மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி தேதி குறிப்பிட்டு அத்தேதியில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் வருமானவரித்துறை கண்டிப்பாக கூறியுள்ளது. அப்படி அசோக் குமார் இந்தமுறை ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.