2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் இருந்தது. இதில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு கட்சிக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது சிவசேனா 55 இடங்களில் வெற்றி பெற்றது இதனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் பாஜக சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்கும் என்று மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆனால் திடீரென்று தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விளக்கி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உடன் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் மொத்தம் 169 எம்எல்ஏக்கள் இருந்ததால் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டரை ஆண்டுகள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகிறார்.
ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் கழிந்த பிறகு சிவசேனா கட்சியில் இருந்த 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் தற்போது நடக்கும் கூட்டணி ஆட்சியில் அதிருப்தி தெரிவித்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணிக்கு ஆதரவு தரப்போவதில்லை என்று கூறி இதற்கு முன்பு வழங்கிய ஆதரவையும் வாபஸ் பெற்றது. அதோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலாக புதிய அணியை தோற்றுவித்து செயல்பட்டு வந்தனர். பிறகு ஏக்நாத் ஷிண்டே அணி பாஜகவுடன் இணைந்தது. மேலும் உத்தவ் தாக்ரே முதல்வர் பதவியில் இருந்து வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுடன் தற்போது இணைந்து ஆட்சி அமைத்தது முதல்வராக ஏக்னாத் ஷிண்டேவும் துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பார்ட்னவிஸ்ஸும் பதவியேற்று மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு சிவசேனா பாஜகவுடன் இணைந்து பிறகு விலகி 35 எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்து உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் இணைந்து தற்போது பாஜக ஆளும் கட்சியாக இருந்து வருகின்ற சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்து கூட்டணி அமைக்க உள்ளது சரத்பவார் தரப்பை நிலைகுலைய செய்துள்ளது.
அதோடு அஜித் பவார் முழுவதுமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து துணை முதல்வராகவும், அவருக்கு ஆதரவு தெரிவித்த 8 எம்எல்ஏக்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 28 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற விழாவில் பங்கேற்ற 43 எம்எல்ஏக்களும் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சரத் பவார் என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரின் அண்ணன் மகனான அஜித் பவாரே தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாஜக ரகசியமாக என்ன வேலை செய்தது என்பது பல அரசியல் தலைவர்களுக்கு தெரியாத விடையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இந்த நிலை தமிழகத்திற்கு 'எப்போது வரப் போகிறது' என்று சூசகமாக சஸ்பென்ஸ் ஒன்றை வைத்துள்ளார்.