24 special

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று .....!என்ற கதையாகிவிட்டது உதயநிதியின் நிலை....!

Udhayanidhi stalin,maari selvaraj
Udhayanidhi stalin,maari selvaraj

உதயநிதி ஸ்டாலின் இதுதான் எனது கடைசி படம் எனக்கூறியும் மாமன்னன் படம் வசூலில் அடிவாங்கியுள்ளது. கடந்த பக்ரீத் பண்டிகை அன்று மாமன்னன் படம் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து திரையரங்களிலும் வெளியிடப்பட்டது, கர்ணன் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை இயற்றிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.


திமுக சமூக நீதி கட்சி ,சமூகத்தில் எல்லாரும் சமம் ,திமுக எல்லாருக்கும் எல்லாம் செய்யும் மற்றும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் என பிரச்சாரம் செய்வதற்காகவே மாரி செல்வராஜை வைத்து படத்தை இயக்கி விளம்பரம் செய்கின்றனர் என மாமன்னன் படம் பற்றி விமர்சனங்கள் எழுந்தது. 

படம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் பற்றி பேசியதும் அதனால் தென் மாவட்டங்களில் சர்ச்சைகளும் ஏற்பட்டது. இதுவே படத்திற்கு தென் மாவட்டங்களில் பெருத்த முதல் அடியை இறக்கியது! பக்ரீத் பண்டிகை அன்று படம் வெளியிட்டால் வசூல் குவிக்கலாம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் வசூல் டல்லாக இருப்பது உதயநிதி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம்தான் கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் வேறு அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேறு கூறியது இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பதனால்தான் ஆனால் அதுவும் இந்த படத்திற்கு கை கொடுக்கவில்லை! எப்படியும் சமூக நீதி பேசுகிறோம், மாரி செல்வராஜ் இயக்கம் வேறு என உதயநிதி தரப்பு வேறு கணக்குகளை போட்டு நிலையில் படத்தின் வசூல் நிலவரம் இடியை இறக்கியுள்ளது. படம் வந்த முதல் நாள் வசூலாக 10 கோடியை எட்டியது. அதன் பின் இரண்டாவது நாளாக படத்தின் வசூல் குறைந்து 7 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டது. படம் இப்படி விளம்பரப்படுத்தப்பட்டு நிலையில் படத்தின் வசூல் முதல் நாளை விட இரண்டாம் நாள் குறைந்த நிலையில் இருந்ததால் உதயநிதி நண்பர்களிடம் புலம்பியுள்ளாராம்!

இது மட்டுமில்லாமல் படம் வெளியானவுடன் நல்ல வசூலை எட்டும் எப்படியும் முதல் 3 நாள் வசூல் 30 கோடியை தாண்டும் என நினைத்து படத்தின் இயக்குனருக்கு சொகுசு காரெல்லாம் உதயநிதி வாங்கி வைத்திருந்தாராம் ஆனால் இந்த நிலையில் 25 கோடி கூட படம் வசூலை எட்டவில்லை என்ற தகவலால் புலம்பல் அதிகமாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் வாங்கி வைத்த காரை வேறு வழியில்லாமல் மாரி செல்வராஜுக்கு கொடுத்துள்ளார் உதயநிதி! 

படம் ஏன் வசூலை குவிக்கவில்லை என்பதற்கு சில சினிமா விமர்சகர்கள் கூறும்போது, படத்தின் ஆடியோ விழாவில் தேவர்மகன் படத்தை பற்றி மாரி செல்வராஜ் பேசியது, ஏற்கனவே கமல்ஹாசனுக்கு மாரி செல்வராஜ் தேவர் மகன் பற்றி இழிவாக கடிதம் எழுதியது போன்றவற்றை தமிழகத்தில் பெரும்பாலும் ரசிக்கப்படவில்லை எனவும், குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ரசிக்கவில்லை அதனால் வசூலில் இந்த அடி விழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் படத்தில் ஒரு சில சமுதாயத்தை மறைமுகமாக குறிப்பிட்டது, சர்ச்சை ஏற்படுத்தும் சில கதாபாத்திரம் என பல சர்ச்சைகளை படத்தில் மாரி செல்வராஜ் வைத்ததன் காரணமாக இந்த படம் இப்படி வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்தது என்றும் கூறுகின்றனர்.

இப்படியாக உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தில் எதிர்பார்த்தது நடக்காத காரணத்தினால் இனி அடுத்த படத்தில் நடிக்க இருந்த ஆசையும் போய்விட்டதாக கூறுகின்றனர். மொத்தமாக உதயநிதிக்கு மாமன்னன் திரைப்படம் வசூலில் பேரிடியை ஏற்படுத்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.