24 special

செந்தில் பாலாஜி மனைவி கொடுத்த மனுவை தள்ளி வைத்த நீதிமன்றம்...!இனி நடக்க போவது என்ன...?

Senthil balaji
Senthil balaji

அமலாக்க துறை வைத்த கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் வருகின்ற 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது, வருகின்ற 27-ம் தேதி நீதிமன்றம் கொடுக்க போகும் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அன்று கொடுக்க போகும் தீர்ப்பை அடிப்படையாக வைத்து தான் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.


அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்த விசாரணையின் போது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில்," அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை தெரிவித்திருக்க வேண்டும். அது அடிப்படை உரிமை.

 அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை. இதை அரசியல் சாசன பிரிவு 15 A-வில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிமன்றக் காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது." என்று வாதிட்டார்.

மேலும் இதை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்றும் வாதிட்டனர் அப்போது குறுக்கிட்ட அமலாக்க துறை தரப்பு ஒருவரை சட்டத்தின் படி கைது செய்தாலே அவர் மீது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை அப்படி இருக்கையில் எப்படி இந்த மனுவை ஏற்க முடியும் எனவும் கூடுதலாக செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த காலத்தை விசாரணை காலமாக கருத கூடாது எனவும் அமலாக்க துறை வாதிட்டது.

செந்தில் பாலாஜி தரப்பு ஏன் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் ஏற்க  வேண்டும் என விடா பிடியாக நிற்பது தற்போது தெரியவந்து இருக்கிறது, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது தான் சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாம் என இடைக்கால உத்தரவு போட்டது.மேலும் அமலாக்கதுறை விசாரணை செய்யவும் பல்வேறு கடிவாளங்களை போட்டது, இந்த நிலையில் தான் இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்தி அமலாக்கதுறை கஷ்டடியை தவிர்த்து செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது நீதிமன்றம் அமலாக்க துறை கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் செந்தில் பாலாஜி அமலாக்க துறை கட்டுப்பாட்டில் செல்வார் என்பதால் அவர் சிறை செல்வது  உறுதியாகும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.