24 special

அடுத்தது உங்க முதல்வர் ஸ்டாலின் தான்...!அண்ணாமலை சொன்னதால் ஆடிப்போய் கிடைக்கும் அறிவாலயம்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

இனி அமைச்சர்களை விட முதல்வர் ஸ்டாலின்தான் குறி என பாஜக நேரடியாக இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது அறிவாலயத்தை நிலைகுலைய வைத்துள்ளது!


அங்கு இங்கு என அமைச்சர்கள் மீது வைக்கப்பட்டு வந்த புகார்கள் தற்பொழுது திரும்பி முதல்வர் ஸ்டாலின் மீது அதிரடியாக கவனம் குவிக்கப்பட்டு புகாராக வைக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  அடுத்தபடியாக அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீது வைக்கப்பட்ட புகார்கள் தற்பொழுது விசாரணையில் உள்ள நிலையில் பாஜக அடுத்த குறியாக தனது புகாரை முதல்வர் ஸ்டாலின் மீது இறக்கி உள்ளது.

பி எஸ் டி கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்க மாட்டோம் என அமைச்சர்  சேகர்பாபு ஏற்கனவே  கூறிய நிலையில், பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் கட்டுமானங்கள் 90 சதவீதம் சரி இல்லை என திமுக அமைச்சரால் ஏற்கனவே சட்டப்பேரவையில் புகார் சொல்லப்பட்ட நிலையில் மீண்டும் சென்னை பெருநகரம் பி எஸ் டி நிறுவனத்திற்கு கட்டுமானம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளதை குறிப்பிட்டு பாஜக அதிரிபுதிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் மக்கள் மத்தியில் பரவலாக வெடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த வீடியோக்களால் திமுக நிலைகுலைந்துள்ளது. தற்பொழுது பாஜக வெளியிட்டுள்ள இந்த வீடியோ நேரடியாக முதல்வர் ஸ்டாலினை குறிவைக்கிறது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மீதும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிபிஐ வழக்கு தொடங்க காத்திருக்கிறது எனக்கூறிய அண்ணாமலை தற்பொழுது இப்படி அடுத்த அதிரடியாக PST கட்டுமான நிறுவன விவகாரத்தை  கையில் எடுத்து முதல்வர் சிங்கப்பூர் செல்வதையும் இணைத்து புகாராக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர்களை காப்பாற்ற அறிவாலயம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் ஸ்டாலின் மீது இப்பொழுது புகார் குவிந்து இருப்பது விசாரணைக்கான முன் எச்சரிக்கையாக இருக்குமோ என அறிவாலய தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது