24 special

திமுகவிற்கு சத்தமில்லாமல் ஆப்பு வைத்த ஆம் ஆத்மி கட்சி....! கத்த முடியாமல் தவிக்கும் அறிவாலயம்....!

Mkstalin
Mkstalin

எதிர்க்கட்சிகள் அனைவரும் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் முதல் மற்றும் இரண்டாவது கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாவது கூட்டம் இன்று பாட்னாவில் கூடியுள்ளது.


இரண்டு கூட்டங்கள் முடிந்து மூன்றாவது கூட்டத்திலேயே இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது காரணம் இந்தியாவில்  நாடாளுமன்ற தேர்தலையொட்டி சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் வருவதால் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் குறிப்பாக மகாராஷ்டிரா பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பெரிய போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் அல்லாமல் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது இந்திய கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்து வகையில் செயல்பட்டு வருவது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காரணம் டெல்லியில் தொகுதி பங்கீடுகள் மற்றும் யாரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பெரிய போரே நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இந்நிலையில் தான் பாட்னா கூட்டத்திற்கு கிளம்பும் முன் அரவிந்த் கெஜ்ஜரிவால் சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்துள்ளார்..

ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதம வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பூகம்பத்தை கிளப்பியுள்ளார்மேலும் தொடர்ந்து பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் என்னை கேட்டால் நான் பிரதம வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் தான் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியதோடு அவருக்கு தான் பிரதமர் மோடிக்கு இணையான பிரதமராகும் தகுதி இருக்கிறது என்றும் கூறியுள்ளார். 

இந்தியா கூட்டணியில் சிலர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில பேர் ராகுல் காந்தி தான் பிரதம வேட்பாளராக வரவேண்டும் என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்த்து மம்தா பானர்ஜி நித்திஷ் குமார் ஆகியோரும் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டிய பட்டியலில் தன் பெயர் இருக்கவேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகின்றனர்.

இதனால் இந்த மூன்றாவது கூட்டத்தில் யாரை பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூன்றாவது எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று சந்தோஷத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமராக யார் வரவேண்டும் என நாம்தான் அறிவிக்கவேண்டும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக மகிழ்ச்சியிலிருந்து வரும் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பிரதமராக வரவேண்டும் என்று அக்கட்சியில் இருப்பவர்களை வைத்து கூறியது தமிழக முதல்வருடன் சேர்த்து திமுக கட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இன்னும் எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதம வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் முதல்வர் தான்தான் பிரதம வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி முந்திக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று கூறியது திமுகவின் எண்ணத்தில் இடியை  இறக்கி உள்ளது.

மேலும் மூன்றாவது கூட்டம் கூட்டம் நடக்கும் நிலையில் அதனை தன் அரசியலுக்கு பயன்படுத்த அரவிந்த் கெஜ்ஜரிவால் நினைத்தது வேறு இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளது..... இந்த கூட்டணி நிலைக்காது வெறும் விளம்பரம்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.