24 special

தீரன் படத்தில் வரும் கொள்ளை காட்சிகளை போன்று நோட்டமிட்ட இளைஞர்

robbery issue
robbery issue

தீரன் படத்தில் வரும் கொள்ளை காட்சிகளை போன்று நோட்டமிட்ட இளைஞர் மற்றும் சிறுவனை கிராம மக்கள் பிடித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ராஜகோபால் நகரில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் சுற்றி தெரிவதாக அவ்வப்போது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வரந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இரண்டு சிறுவர்கள் வெகு நேரமாக மறைந்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து கேட்டபோது சிறுவர்கள் இருவரும் அரபு மொழியில் பேசி இருக்கிறார்கள்.மேலும் தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு நேரத்தில் அப்பகுதிகளில் அந்த இருவரும் உலா வந்தது தெரியவந்தது.


சிறுவர்களை நோட்டம் பார்க்க கொள்ளை கும்பல் அனுப்பி இருக்கலாம் என சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பெயரில் அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கல்கொத்தா வை முர்சித்  மற்றும் ஷாஜகான் என்பதும் ஒருவனுக்கு 17 வயது மற்றவனுக்கு 12 வயது என்பதும் தெரியவந்தது.அப்பகுதியைச் சேர்ந்த சவுக்கத் என்பவரிடம் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகும் கூறினர். நாய்க்களுக்கு பயந்து அப்பகுதிக்கு வந்ததாக கூறுகின்றனர்.  ஆனால் சைக்கிளில் வந்த இந்த இரண்டு பேர்களும் சைக்கிளை அங்குள்ள முட்புதரில் மறைத்து வைத்துவிட்டு தனியாக நின்றிருந்த ஆட்டோவில் வெகு நேரமாக அமர்ந்து வீடுகளை நோட்டமிட்டு கொண்டு இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் இது போன்ற வெளிமாநில நபர்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறியதையெடுத்து இந்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று வீடுகளில் நோட்டமிட்டு திருட வந்தவர்களா எனவும்,  ஏற்கனவே அப்பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களா என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . மேலும் பிழைப்பு தேடி தமிழகம் வரும்  இளைஞர்கள் தொடர்ந்து கொள்ளை ,திருட்டு , வழிப்பறி கொலை உள்ளிட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வருவது தமிழக மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வெளி மாநில இளைஞர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ள தமிழக காவல்துறையும் தமிழக அரசும் உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது. சிறுவர்களை அனுப்பி நோட்டம் பாக்க செய்த நபர்கள் யார் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.