Tamilnadu

"வடிவேலு பாணியில்" முதல்வர் ஸ்டாலினிடம் காசோலை பெற்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை வெளியில் வந்தது பகிர் சம்பவம்!

vadivelu
vadivelu

முதல்வர் ஸ்டாலின் கையில் 5 லட்சத்திற்கான காசோலை வாங்கிய பெண்ணிற்கு வங்கிக்கு சென்று காசோலையை பணமாக மாற்ற நினைத்த போது கடும் அதிர்ச்சி காத்து இருந்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 மகளிர் சுய உதவி உறுப்பினர்களுக்கு ரூ.2749 கோடி 85 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த 14-ம் தேதி தொடங்கி வைத்தார் .


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 52 ஆயிரத்து 574 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 6 லட்சத்து 83 ஆயிரத்து 462 பயனாளிகளுக்கு தேசியமமாக்கப்பட்ட வங்கிகள் ,கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2 ஆயிரத்து 485 கோடியே 96 லட்சம் வங்கி கடன் மற்றும் 30 இ- சேவை மையங்கள் துவக்கி வைத்து 30 பயனாளிகளுக்கு உரிமம் வழங்கினார் .

முன்னதாக  மு.க.ஸ்டாலின் அவரது பண்ணை வீட்டில் இருந்து புறப்பட்டு திருத்தணி ஜி. ஆர். டி. கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சிக்கு வந்தபோது  வாழை மரத் தோரணங்கள் , பழங்களால், பலூன்களால் ஆன வளைவுகள், வரவேற்பு பேனர் வைத்து தி.மு.க.வினர் திருத்தணி வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன்,  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காசோலை உண்மை என்று நம்பி தனது குழுவை சேர்ந்தவர்களை அழைத்து கொண்டு மகளிர் ககுழு தலைவர் ஒருவர் வங்கிக்கு செல்ல இந்தசெக் போலி எனவும் இதில் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை அமைச்சரை தொடர்பு கொள்ளுங்கள் என வெளியேற்றி இருக்கிறார்கள் வங்கி நிர்வாகிகள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் முதல்வரே போலியாக செக் கொடுக்கலாமா நான் இதே போன்று கொடுத்து இருந்தால் என்ன நடந்து இருக்கும், விடமாட்டேன் நான் அவதூறு வழக்கு தொடுக்க போவதாக குறிப்பிட்டுள்ளார் காசோலையை உண்மை என நம்பிய பெண். வடிவேல் படத்தில் கிணற்றை காணோம் என வரும் காமெடி போல் முதல்வர் கொடுத்த செக்கில் உள்ள கணக்கில் பணத்தை காணோம் என்ற சம்பவம் நடந்து இருப்பது பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.