24 special

உதயநிதி துணை முதலமைச்சர் பதவி வதந்தியாம்... வெளியான நச் காரணங்கள்!

Udhayanidhi stalin, CM Stalin
Udhayanidhi stalin, CM Stalin

திமுகவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுபேற்கவுள்ளதாக சில தகவல்கள் வந்தன. இந்த தகவல் முழுக்க ஸ்டாலினுக்கு உடல்நல பிரச்சனை உள்ளது அவர் ஓய்வெடுக்கவுள்ளார் அதன் காரணமாக தான் உதயநிதிக்கு பதவி கொடுக்கலாம் என தகவல் கசிந்தன. ஆனால், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டாலின் எனக்கு உடல்நல பிரச்சனை ஏதும் இல்லை நன்றாக உள்ளேன் என கூறி உதயநிதி துணி முதலமைச்சர் என்ற தகவல் பொய்யானது அது வதந்தி என கூறினார். இதும் விமர்சனமாக மாறியது பொது வெளியில் ஒரு முதலமைச்சர் இப்படி பேசலாமா எழுதி கொடுத்தால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்பது போல பேசக்கூடாது என விமர்சனம் வந்தது.


அரசியலுக்கே வரமாட்டேன் என சொன்ன உதயநிதிக்கு பதவி மேல் பதவி கொடுத்து அழகு பார்த்தது திமுகவும் அதில் உள்ள மூத்த தலைவர்களும் அடுத்தது துணை முதலமைச்சர் பதவி எடுக்கப்போவதாக வெளியானது தகவல். வரும் 28ம் தேதி ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்வதாக அறிவித்திருந்தார் அது எதற்காக அந்த பயணம் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் வரும் 21ம் தேதி இளைஞரணி மாநாடு மூலம் மூடி சூட்டப்படலாம் என்ற தகவல் கசிந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்டாலின் இது வதந்தி நம்பவேண்டாம் என தெரிவித்தார்.

இதற்கிடையில் எதற்காக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவில்லை என 3 காரணங்கள் வெளியாகியுள்ளது. *லோக்சபா தேர்தலுக்கு முன் கொடுத்தால் தேர்தல் நேரத்தில் அது பெரிய பிரச்சனை ஆகும். முக்கியமாக பாஜகவிற்கு அவல் கொடுத்தது போல ஆகிவிடும். அதிலும் சனாதன விவகாரத்தில் ஏற்கனவே பாஜக உதயநிதி மீது கோபத்தில் உள்ளது. * திமுகவில் பொதுவாக ஒரு வழக்கம் உண்டு. மேல் பதவிக்கு வர வாரிசாக இருந்தாலும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் உதயநிதிக்கு லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதாம். அதை நிறைவேற்றினால் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.

* அமைச்சர்கள் மீதான வழக்குகள் பிப்ரவரி மாதம் வரும் அப்போது பல விமர்சனங்கள் வைக்கப்படும். அதோடு இந்த விமர்சனமும் வைக்கப்பட வேண்டாம் என்பதால் இப்போதைக்கு உதயநிதியை துணை முதல்வருக்கும் முடிவை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். இப்படியான ஒரு மூன்று தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க மூத்த தலைவர்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளார்களாம் அதற்கான காரணம் துணை முதலமைச்சர் அடுத்து முதலமைச்சர் பதவி என கொடுத்தால் அவருக்கான ஆதரவு கட்சியில் எப்படி இருக்கிறது நிரூபிக்க டாஸ்க் கொடுத்துள்ளாராம். 

இந்நிலையில், கருணாநிதி இருக்கையில் ஸ்டாலினுக்கு பதவி இவ்ளோ ஈசியாக கொடுக்கவில்லையாம். அதாவது, ஸ்டாலினுக்கு தொகுதிவாரியாக நடைபயணம் மேற்கொண்டு அவரது ஆதரவு தெரிவித்து பின் அரசியலில் அவருக்கு அனுபவம் போதுமா என்ற திறமையெல்லாம் வைத்து தான் கொடுத்தார்கள் அதுபோல் உதயநிதி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் எல்லா பதவியும் கொடுத்தால் அது எங்க பொய் நிற்கும். அதனாலேயே அவருக்கு சில டாஸ்குகளை கொடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிகின்றனர். மேலும், உதயநிதி சனதானம் குறித்து பேசியது நாடு முழுவதும் சர்ச்சையாக மாறியது அடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது. அது காரணமாக எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வந்துள்ளது. இதனால் தான் இந்த இழுபறி என்று ராசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.