Tamilnadu

ஆளுநர் விவகாரம் வெங்கயா நாயுடு கொடுத்த "டோஸ்" வெளியேறிய திமுக எம். பி கள்!

Venkaiah naidu and dmk
Venkaiah naidu and dmk

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா சட்டமாக இயற்றப்பட்டு ஒப்புதலுக்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை 6 மாதகாலம் பரிசீலனைக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே இன்று திருப்பியனுப்பியுள்ளார்.


இந்த நிலையில், தமிழக ஆளுநரின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலங்கள் அவையில் தி.மு.க எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து  பேசிய தி.மு.க எம்.பி திருச்சி , ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று பேரறிஞர் அண்ணா கூறியதைச் சுட்டிக்காட்டி, ``நீட் விலக்கு மசோதாவை சட்டப்படி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும்.

மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே திருப்பியனுப்பியது அரசியல் சட்ட விரோதம்" என முழக்கமிட்டார்.மேலும் ஆளுநர் விவாகரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார், அத்துடன் நாளை இதே நிலை பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் உண்டாகலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது பேசிய மாநிலங்களை தலைவர் வெங்கயா நாயுடு இப்போது விவாதிக்க முடியாது ஸிரோ நேரத்தில் அனுமதிக்க பட்டவர்களுக்கு மட்டுமே பேச அனுமதி ஒரு வேலை பூஜியம் நேரம் இல்லை என்றாலும் நிச்சயம் பேச அனுமதிக்க முடியாது எனவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் இதனால் அவையில் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்ட திமுக எம்பி கள் அவையில் இருந்து வெளியேறினர்.

தொடர்ந்து டெல்லியில் திமுக எம்பி கள் கூட்ட தொடரில் ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு வெளியேறிவது தொடர் கதையாக மாறி வருகிறது.

More watch videos