அமைச்சர் செந்தில் பாலாஜி எது நடக்க கூடாது என நினைத்து இருந்தாரோ அது நடந்துவிட்டது, வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தற்போது அமலாக்கதுறை செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் மத்திய துணை இராணுவ வீரர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். இதே போல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது, கடந்த முறை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த எந்த திமுகவினரும் இந்த முறை அமலாக்க துறை சோதனை நடத்தும் தெரு பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் என்றால் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சோதனை நடத்தும் அதிகாரமும் பண பரிவர்த்தனை குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரமும் இருக்கிறது அவர்களால் ஒருவரை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் இல்லை.
இந்த நிலையில் அமலாக்க துறை இன்று செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடத்துவது திருப்பத்தை உண்டாக்கி இருக்கிறது, ஏன் என்றால் அமலாக்க துறை ஆதாரங்கள் இல்லாமல் களத்தில் இறங்காது கடந்த வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி அளவிற்கு கணக்கில் வராத பரிவர்த்தனை விவரங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமலாக்க துறை களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி அமலாக்க துறைக்கு எந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பதால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு அதிர்ச்சி அடைந்து இருக்கிறது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுவதால் காலையில் வாகிங் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர அவசரமாக தற்போது அமலாக்க துறை சோதனை குறித்த விவரங்களை அறிய விரைந்து இருக்கிறாராம்.
செந்தில் பாலாஜி வாக்கிங் சென்று நேரத்தில் செந்தில் பாலாஜி தம்பி தொடங்கி பலரை கொத்தாக வருமான வரித்துறை அதிகாரிகள் தூக்கி இருக்கும் சம்பவம் தற்போது அதிர்வலைகலை உண்டாக்கி இருக்கிறது.