24 special

அமலாக்கதுறை திருப்பி அடித்துள்ளது...!பல தலைவர்கள் சிக்க போகிறார்கள்...!


காவிரி மருத்துவமனையில் விசாரணைக்கு செந்தில்பாலாஜி தரப்பு தொடர் சிக்கலை ஏற்படுத்தி வருவதால் அமலாக்கத்துறை அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.சினிமா காட்சிகளில் வருவது போல் கைது செய்ய முற்பட்டவுடன் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தற்போது அமலாக்க துறையினர் வைத்துள்ளனர்.


இரண்டு தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை முற்படும்போதெல்லாம் அவருக்கு நெஞ்சு வலி இருக்கிறது அவர் உடல் நிலை சரியாகவில்லை! சரியாகட்டும் கொஞ்சம் காத்திருங்கள் என்று செந்தில் பாலாஜியின் தரப்பினர் கூறி வருகின்றனர். இதையே காரணமாக வைத்து விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று செந்தில் பாலாஜி தரப்பு ஆலோசித்து வருகிறதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் ஆளும் அரசும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன, அதாவது அமலாக்கத்துறை விசாரணையில் ஈடுபடும்போதெல்லாம் செந்தில் பாலாஜியின் தரப்பினர்கள் தவிர காவேரி மருத்துவமனை மருத்துவர்களும் மருத்துவர் குழுவும் அவர் உடல்நிலை மோசமாக உள்ளது, விசாரணையை எதிர்கொள்ளும் அளவிற்கு செந்தில்பாலாஜி உடல்நிலை இல்லை என்று கூறி அமலாக்க துறையை விசாரணை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால் அமலாக்கத்துறை கடுப்பாகி உள்ளது. 

அதாவது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் பொழுது தனது கடுமையான எட்டு வாதங்களை முன்வைத்த அமலாக்க துறையின் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையை காவிரி மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது மனைவியின் கருத்திற்கு இணங்க அதன்படியே நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் செந்தில் பாலாஜியிடம் 15 நாட்களுக்கு விசாரணை மேற்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவிற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு எட்டு நாட்கள் விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மருத்துவர்களின் அனுமதியுடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய ஒரே காரணத்திற்காக செந்தில் பாலாஜி தரப்பினர் அமலாக்கத்துறை ஒவ்வொரு முறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள சொல்லும் பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லை அவர் தற்போது ஓய்வெடுக்கிறார்! ஓய்வெடுக்க வேண்டும்! அவரது உடல் நிலையை விசாரணை செய்து இன்னும் மோசம் ஆகி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறி அமலாக்கத்துறை விசாரணை செய்ய விடாமல் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வருகின்றனர். 

இதனால் கோபம் அடைந்த அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனையில் மாற்றியதற்கு எதிராக அவசர வழக்காக மேல்முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றமும் அமலாக்க துறையின் மேல்முறையீட்டை நாளை விசாரிக்க உள்ளதாக ஒப்புதல் அளித்துள்ளது. விசாரணையை தடுத்து வந்த செந்தில் பாலாஜி தரப்பினரை திருப்பி அடிக்கும் வகையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளது, விசாரணைக்கு தேவையான போதி ஆவணங்களை முன்னதாகவே அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கி உள்ளதால்  அமலாக்க துறை தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பளிக்க பட்சத்தில் இன்னும் இரு தினங்களில் அறுவை சிகிச்சை முடிந்த அன்றே செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இப்படி நடந்தால்  செந்தில் பாலாஜியின் தரப்பால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும் மேலும் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள ஆவணங்களை அடிப்படையில் விசாரணை மேற்கொண்டால் இன்னும் ஊர்ஜிதமாகாத திமுகவின் பிரபல தலைவர்களின் பெயர்கள் கூட இதில் மாட்டலாம் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.