24 special

தொடர்ந்து பிரச்சனையை சந்திக்கும் திமுக....!திடீர் முடிவெடுத்த அறிவாலயம்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

தொடர் ரெய்டு, கள்ளச்சாராய இறப்புகள், எதிர்க்கட்சி பிரமுகர்கள் கைதுகள், மின் தடை என தொடர்ச்சியாக திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவருவதால் திடீர் முடிவெடுத்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.


எந்த ஒரு கட்சிக்கும் தான் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுதே இத்தனை அவப்பெயர்களையும் சுமந்து கொண்டு அதனை மறைத்து சாதனை கொண்டாடும் சூழ்நிலை வந்ததே கிடையாது ஆனால் தற்போது இதை அனைத்தையும் திமுக தன் தோள் மீது சுமந்து கொண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். அரசு நடத்தும் டாஸ்மாக்கின் மதுபானங்கள் மீதான அதிக கட்டண வசூல் விஸ்வரூபம் எடுத்தசமயம் கள்ளச்சாராய புழக்கம் காரணமாக எக்கியார் குப்பத்தில் பல பேர் உயிரிழந்தனர். இதைப்பற்றியும் இதனை தடுத்து நிறுத்தவும் கிராமத்து மக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலே இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்ததாக கிராமத்தின் மக்களே குற்றம் சாட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளிலும் அதிக தொகை வைத்து விற்கச்சொல்லி அதனை ரவுடிகள் கும்பலை வைத்து அந்த பணத்தை வசூலித்து வந்த காரியமும் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு ஆளும் கட்சியின் அமைச்சர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளின் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

இந்த ரெய்டுகளில் முதல்வரின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையும் அமலாக்கத்துறை வசம் சிக்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜியும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரு துறைகளிடமும் சிக்கினார். இது மட்டுமல்லால் திமுக ஆட்சியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஜி ஸ்கொயர் நிறுவனம் வருமானவரித்துறை அதிகாரிகளால் தொடர் ரெய்டில் சிக்கியது. இதனால் மக்கள் மத்தியில் திமுகவிற்கு இருந்த கொஞ்ச நெஞ்ச நல்மதிப்பு மரியாதையும் குறைந்து தற்போது திமுக என்றால் அதிருப்தி என்ற நிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதே எண்ணம் மக்களிடம் நிலைத்திருந்தால் அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக நமக்கு ஒரு ஓட்டு கூட வராது! டெபாசிட்டை இழந்து கடுமையான சரிவை சந்திக்க நேரிடும் என்று திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் தலைமையிடம் கூறிவந்தனர்.

இப்படி தொடர்ந்து மக்கள் மத்தியில் இருக்கும் அவப்பெயரை எப்படியாவது இந்த தேர்தல் கால இடைவெளியில் மாற்றிவிட வேண்டும் என்பதற்காக அவசர ஆலோசனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு தற்போது அதற்கான நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கி உள்ளது. அதன்படி ஆட்சிப்பணி அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது தலைமை செயலகம் அதில் நில சீர்திருத்தத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் வணிகவரித்துறை இணை ஆணையராகவும், பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராணி கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குனர் ஆயிஷா மரியம் சிறுபான்மையில் நலத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் சிலர் மாற்றப்பட்டுள்ளனர் இப்படி கிட்டத்தட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. 

ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்த சிபிஐ ரெய்டு முதல்வர் வீட்டுக்கு தான் என கூறியதாலும், அமலாக்க துறையின் அடுத்த ரெய்டு அக்டோபர் மாதத்திற்குள் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளதாலும் இதனால் திமுகவிற்கு எந்த ஒரு இடையூறும் வராமல் இருக்க இந்த 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.