24 special

பாஜக தேர்தல் அறிக்கை ரெடி...!உறுதி செய்த டெல்லி வட்டாரம்...!

Pm modi,annamalai
Pm modi,annamalai

2024 தேர்தலை மையமாக கொண்டு பாஜக தேசிய அளவில் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறது, இதற்காக தேர்தல் யுத்திகள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை போன்றவற்றை பாஜக தொடங்கி இருக்கும் சூழலில் மத்திய உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜென்சிகள் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக சார்பில் போட்டியிடும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியில் பாஜக இறங்கி இருக்கிறது.


அதன் படி மத்திய உளவுத்துறை தமிழகம் சார்ந்து கொடுத்த ரிப்போர்ட் என தகவல் ஒன்று கசிந்துள்ளது, அதில் தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை முதல் சமீபத்தில் பாஜகவில் இணைந்த மைத்ரேயன் வரை யார் யார் எங்கு போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு என உளவுத்துறை  தெரிவித்து இருக்கிறதாம்.

நாற்பது தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாஜக உத்தேச வேட்பாளர்கள் (2024 பாராளுமன்ற பொதுத்தேர்தல்)

கன்னியாகுமரி – டாக்டர். தமிழிசை செளந்திரராஜன்

தூத்துக்குடி – சசிகலா புஷ்பா

விருதுநகர் - பேராசிரியர் இ ராம.ஸ்ரீனிவாசன்

மதுரை – ஏ.ஆர். மகாலட்சுமி 

ராமநாதபுரம் – கருப்பு முருகானந்தம்

சிவகங்கை – தேவநாதன் யாதவ்

சிதம்பரம் – தடா பெரியசாமி

மயிலாடுதுறை -  வேலூர் இப்ராஹிம் அல்லது பாத்திமா அலி 

நாகப்பட்டினம்  வி. பி. துரைசாமி

 கடலூர் – வினோஜ் பெ. செல்வம்

விழுப்புரம் - பொன்.வி.பாலகணபதி 

கள்ளக்குறிச்சி – ரவி பச்சமுத்து

நாமக்கல் – கே.பி. ராமலிங்கம்

திருப்பூர் – பேராசிரியர் கனகசபாபதி 

ஈரோடு – ஜி.கே. நாகராஜன்

நீலகிரி – எல். முருகன்

கோயம்புத்தூர் – ஏ.பி. முருகானந்தம்

திண்டுக்கல் – எம்.எஸ்.ஷா 

கிருஷ்ணகிரி – கே.எஸ்.நரேந்திரன்

வேலூர் – பி. கார்த்தியாயினி 

திருவண்ணாமலை – கே.ஆர்.பாலசுப்பிரமணியம்

ஆரணி - ஏ.சி. சண்முகம் 

வடசென்னை – கரு. நாகராஜன்

மத்திய சென்னை - குஷ்பு சுந்தர்

தென்சென்னை – சமீபத்தில் பாஜகவில் இணைந்த டாக்டர். மைத்ரேயன் அல்லது SG சூர்யா என பட்டியல் நீண்டு இருக்கிறது.

தென் சென்னை தொகுதியில் யார் போட்டியிடுவது என பாஜகவில் மிக பெரிய போட்டி இருக்கிறதாம் பாஜகவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் தென் சென்னையும் ஒன்று என்றும் தென் சென்னையில் வெற்றி பெற்றால் எப்படியும் மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என கணக்கு போட்டு களத்தில் இறங்கி பலரும் தங்கள் பணிகளை செய்து வருகிறார்களாம்.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதை பொறுத்தே தொகுதிகள் இறுதியாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்துவது உறுதி என்கின்றனர் டெல்லி வட்டாரங்கள்.

இது பாஜகவில் யார் எங்கு போட்டியிடலாம் என்ற உத்தேச பட்டியல் தானே தவிர  உறுதியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.