24 special

'மணல்' கொள்ளை விவகாரத்தில் இரண்டு பேரை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம்!

Rathinam, Ramachandiran
Rathinam, Ramachandiran

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதமாக மணல் குவாரிகளில் இரண்டு குழுக்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரிந்து எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டத்தில் சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனையில் அடிப்படையில் தமிழக அமைச்சரவையில் இருக்க கூடிய முக்கிய தலை சிக்குவதாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக நீர் வளத்துறை மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பட்டது, இந்த விசாரணையா முடிவில் இரண்டு பெரிய தலையை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டுவதாக தகவல் கசிந்துள்ளன. 


அதற்கேற்றாற் போல் அதிகாரிகள் மணல் குவாரிகள் அதன் ஒப்பந்ததாரர்கள் மணல் குவாரிகளின் உரிமையாளர்கள் அவர்களின் அலுவலகங்கள் முக்கிய தொழில் அதிபர்கள் என தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் ஒரே நேரத்தில் இறங்கிய அமலாக்கத்துறையால் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்களில் சட்டத்திற்கு புறமான மணல் நதிகளில் இருந்து அள்ளப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் குவாரிகளில் கொட்டப்பட்டுள்ள மண்ணின் அளவு குறித்தும் அதிகாரிகள் விசாரணை செய்தது கியூ ஆர் கோடு மூலமாக பல லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையிலான மணல் அள்ளப்பட்டுள்ளதும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதற்கு அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறை நீர்வளத்துறை அதிகாரிகளில் சிலரது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டது. அங்கு சோதனை நடத்தியது ரூபாய் 12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கணக்கில் வராத ரூபாய் இரண்டு புள்ளி 33 கோடி ரொக்கமும் ரூபாய் 56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கமும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரிக்க நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிற்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இந்நிலையில் கடந்த வாரம் அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளித்தார். சுமார் இரண்டு நாட்களாக நடந்த விசாரணையில் முதலமைச்சர் ஸ்டாலின் வரை கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் திண்டுக்கல் ரத்தினம் தொடர்புடைய இடத்தில் மீண்டும் சோதனை செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.  

அமலாக்கத்துறை தற்போது மணல் குவாரி ஒப்பந்தத்தார்களான ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நீர்வளத்துறை முதன்மை அதிகாரி முத்தையா விடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் இவர்களை கைது செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தச் ஒப்பந்ததாரர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் அமலாக்கத்துறை தனிப்படை காவலரை அமைத்து ரத்தினம் மற்றும் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். இருவர்களும் கைது செய்து விசாரித்தால் திமுகவில் உள்ள மூன்று அமைச்சர்கள் வரை சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோக்சபா தேர்தலுக்குள் முதலமைச்சரிடமும் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று  அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. முதலாவதாக  கனிமவளத்துறை அமைச்சரும் திமுக கட்சியில் பொது செயலாளருமான துரைமுருகன் சிக்கலாம் என்றும் கூறுகின்றனர். லோக்சபா தேர்தலின் போது தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட கூடும் என்றும் கருத்துக்கள் வெறும் பேசப்படுகிறது.