Cinema

சீனு ராமசாமியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய மனிஷா!...அனைத்திற்கும் முற்றுப்புள்ளி!

Seenu ramasamy, Manisha yadav
Seenu ramasamy, Manisha yadav

நடிகர் மன்சூர் அலிகான் முன்னணி நடிகை திரிஷா குறித்து பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்கிடையில் பிரபல வலைப்பேச்சு பிஷ்மி இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகை மனிஷா யாதவிடம் நடந்து கொண்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அதில், இயக்குனர் படப்பிடிப்பின் போது நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.


தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சீனு ராமசாமி, இவர் இடம் பொருள் ஏவல் என்று படத்தை இயக்கும்போது நடிகை மனிஷா யாதவிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் அதனாலேயே அந்த படத்தில் இருந்து மனிஷா யாதவ்  விலகியதாக வலை பேச்சாளர் பிஷ்மி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ஆதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது, இதன் காரணமாகவே அந்த படம் வெளியாகாமல் உள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரம் மன்சூர் அலிகான் பேசியதை மக்கள் ஓரம் தள்ளிவிட்டு இயக்குனர் சீனு ராமசாமியை பற்றி ஆராய தொடங்கினர்.

உடனே இயக்குனர் சீனு ராமசாமி பிஸ்மியின் பேச்சுக்கும் மக்கள் இடத்தில் நற்பெயரை வாங்க வேண்டும் என்று அந்த விவாகரத்துக்கு சமூக தளத்தில் விளக்கம் கொடுத்தார். அதாவது, இடம் பொருள் ஏவல் ஷூட்டிங் சமயத்தில் நானும் மனீஷாவும் வெவ்வேறு ஹோட்டல்களில் தான் தங்கி இருந்தோம். அப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். கிராமத்து நாயகியாக இவர் சரியாக நடிக்க மாட்டார் என்பதால் விஜய் சேதுபதிக்கு பதில் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடிக்க சொன்னேன். இல்லை, எனக்கு இந்த கேரக்டர்தான் வேண்டுமென சொன்னார். ஆகவே அவரை படத்தில் இருந்து நீக்கினேன். அந்த கோபத்தில் என் மீது பழி போட்டிருக்கலாம்."என்று பதில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறனும் தனது சமூகத்தளத்தில் ஸர் செய்ததால் அதிகம் பேசப்பட்டு வந்தது. இதுவரை மௌனம் காத்து வந்த நடிகை மனிஷா யாதவ் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பேட்டி ஒன்றில் மனிஷா யாதவ் பேசும்போது, “கடந்த வாரம் சீனு ராமசாமியின் ஆபீசில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனக்கு அது மிகவும் விநோதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லாத நிலையில், ஏன் அவர் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ’இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும், அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதும்தான்.

அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உடனடியாக எனக்கு பதில் வேறொரு நடிகை அதில் நடிக்கவைக்கப்பட்டார். அனைத்தும் திடீரென நடந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் இல்லை என்று ஓர் இயக்குநர் நினைத்து என்னை நீக்கினால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒருவர் எனக்கு எல்லா விதமான குப்பைகளை மெசேஜ் செய்வதை நான் அனுமதிக்கவில்லை. அது என்னை அப்செட் செய்ததால் அது குறித்து நான் யாரிடமும் பேசகூட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர் துறையில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன்.

’ஒரு குப்பை கதை’ பட விழா மேடையில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து நன்றி சொன்னேன். மேடையில் இருக்கும் ஒருவரை விட்டுவிட்டு அடுத்தவருக்கு நன்றி சொல்வது தொழில் தர்மம் அல்ல. நல்ல மனம் கொண்ட பெரிய இயக்குநர்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் தார்மிக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. எனது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தத் துறையில் இருக்கும் எனது நலம் விரும்பிகள் ஆகியோரது ஆதரவு எனக்கு இருப்பதால் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எந்த ஒரு பெண்ணும், இதுபோன்ற சூழலை மீண்டும் எதிர்கொள்ளமாட்டார் என்று நான் நம்புகிறேன்” என்று மனிஷா யாதவ் கூறியுள்ளார்.