24 special

டோட்டலா தென் மாவட்டம் முழுவதும் காலி.... உதயநிதிக்கு விழுந்த அடி!

udhyanithi
udhyanithi

அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு உள்ளார் இதனை அடுத்து அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்கப்படவில்லை என்பது மட்டுமே உண்மை மற்றபடி துணை முதல்வராக அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார். முதல்வர் தற்பொழுது வெளிநாட்டில் இருக்கிறார் அதனால் இவர் மேற்கொள்கிறார் என்பது மட்டுமின்றி முதல்வர் தமிழகத்தில் இருந்த பொழுதும் அவர் கலந்து கொள்ள வேண்டிய பெரும்பாலான நிகழ்ச்சிகள் மற்றும் பணிகளை அமைச்சர் உதயநிதி தான் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தேர்தல் வேலைகள் அனைத்தையும் திமுக தீவிரப்படுத்தி வருகிறது, அதன்படி மாவட்ட வாரியாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை சென்னையில் நடத்தி அதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தர்மபுரி, மதுரை போன்ற சில மாவட்ட திமுக நிர்வாகிகள் தற்போது அந்த மாவட்டங்களில் எம்பி யாக இருப்பவர்களை மீண்டும் நியமிக்க கூடாது என்ற கோரிக்கை முன் வைத்தனர், அறிவாலய தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! 

கடந்த ஆறு நாட்களாக மாவட்ட வாரியாக நடைபெற்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில்  ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் அந்தந்த மாவட்டத்தில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் முதல் அந்த மாவட்டத்தில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை முன்வைத்துள்ளனர். அப்படி கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற தேர்தலில் மதுரையில் திமுகவும் கூட்டணி கட்சியினர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் 2009 முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் அழகிரி மட்டுமே திமுக சார்பில் வெற்றி பெற்றிருந்தார், கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கூட திமுக கூட்டணியில் சிபிஎம் வேட்பாளர் தான் மதுரையில் வெற்றி பெற்றார் அதனால் இந்த முறை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதோடு மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலருக்கு இடையே உள்ள பிரச்சனை குறித்தும் பஞ்சாயத்து பேசப்பட்டுள்ளது! 

இந்த கூட்டத்தை அடுத்து தேனி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு நடைபெற்ற கூட்டத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியை மட்டும் இழந்த திமுக கூட்டணி இந்த முறை கண்டிப்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டது. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த திமுக பிரதிநிதிகள் கடந்த முறை தேனி தொகுதியை காங்கிரஸிற்கு ஒதுக்கீடு தான் தோல்வியின் முக்கிய காரணம் என்றும் தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகிக்குள் நிலவும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

இது மட்டும் இன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பால் திமுகவிற்கு அங்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடியை தொடர்ந்து கன்னியாகுமாரியில் உள்ள திமுக மேயருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜிற்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகவும் பாஜக கன்னியாகுமரியில் பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி விட்டது ஆனால் இன்னும் திமுக அந்த பகுதியில் தேர்தல் பணிகளை தொடங்காமல் உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜிற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாக தென்மாவட்டங்களில் வரிசையாக பின்னடைவு மற்றும் உக்கட்சி பூசல்களை சந்தித்து வரும் திமுக தென் மாவட்டத்தின் மொத்தமாக காலியாக போகிறது என தகவல்கள் வந்துள்ளதால் உதயநிதி பெரும் அப்செட்டில் இருக்கிறார்.