பாலிவுட் திரைத்துறையில் 2013 ஆம் ஆண்டு வெளியான நாஷா படத்தின் மூலம் பூனம் பாண்டே நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் இதற்கு முன்பாக மாடலாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் நடிகையாகவும் மாடலாகவும் பாலிவுட் திரை உலகில் கலக்கி வந்த பூனம் கங்கனா ரணாவத் நடத்திய ரியாலிட்டி ஷோவான லாக் அப் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் சமூக பிரச்சனைகளுக்கு தைரியமாகவும் பதிவுகளை இட்டு வரும் பூனம் பல தொண்டு பணிகளையும் மக்களுக்கு உதவி புரியும் சேவைகளையும் செய்து வருபவர். இந்த நிலையில் திடீரென்று அவர் கர்ப்பப்பை புற்று நோயால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. அதுவும் பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இன்று காலை எங்களுக்கு கடினமான நேரமாக அமைந்துவிட்டது எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை புற்று நோயால் இழந்து விட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக பூனம் பாண்டேவின் பெற்றோர்கள் தரப்பில் பதிவிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து பூனம் பாண்டேவின் ரசிகர்கள் கவலையில் அவரைக் குறித்த பதிவுகளை இட ஆரம்பித்தனர். மேலும் இவரது இறப்பு செய்தி பாலிவுட் வட்டார முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பூனம் பாண்டேவின் மேலாளர் பூனம் பாண்டே விற்கு புற்றுநோய் இருந்தது உண்மைதான்! அதோடு உத்திரபிரதேசத்தில் அவர்கள் சொந்த ஊரில் இறுதி சடங்குகள் நடக்கும் என்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இதனால் பாலிவுட் வட்டாரம் பெரு அதிர்ச்சி அடைந்து பூனம் பாண்டேவின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வந்தனர். பல இது குறித்து உண்மையை அறிந்து கொள்வதற்காக பூனம் பாண்டேவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளத்திலும் அவரது இறப்பு குறித்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல பதிவுகள் பதிவிடப்பட்டனர். அது மட்டும் இன்றி 32 வயதில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள பூனம் இப்படி திடீரென்று கர்ப்பப்பை புற்றுநோய் இறந்தது பலருக்கு அதிர்ச்சியும் கொடுத்தது. அதே சமயத்தில் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் இல்லையே எனவும் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென்று பூனம் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நான் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என்று பூனம் பாண்டேவே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் நான் உயிருடன் தான் இருக்கிறேன் கர்ப்பப்பை வாய் போற்று நோயால் நான் இறக்கவில்லை ஆனால் ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பப்பை புற்று நோயால் பலியாகி வருகின்றனர் இது குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை மற்ற புற்றுநோயை போல இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்! முன்கூட்டியே இதனை பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக அவசியம் மேலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காகவே இறந்து விட்டதாக பதிவிட்டிருந்தேன் நான் இருந்து விட்டதாக பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வந்தனர் அதற்காக நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.
மேலும் பூனம் பாண்டே இறந்ததாக வெளியான செய்தியை அடுத்து அனைத்து நியூஸ் சேனல்களிலும் பூனம் பாண்டே குறித்த இறப்பு செய்தியும் அவர் எப்படி இறந்தார் இதனால் பாதிக்கப்பட்டிருந்தார்! அதனை எப்படி கியூர் பண்ணலாம் என்று பல செய்தி கட்டுரைகள் வெளியானது அப்படி பரபரப்பாக பேசப்பட்டிருந்த நிலையில் பூனம் பாண்டே இறக்கவில்லை என்ற ஒரு வீடியோ வெளியானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.