சின்னத்திரையில் பல டெலிவிஷன் சோக்களின் தொகுப்பாளராகவும் ஆன்கராகவும், காமெடியனாகவும் பணியாற்றிய சிவகார்த்திகேயன் வெள்ளி திரையில் தனது பயணத்தை தொடங்கி தற்பொழுது டாப் 10 சூப்பர் ஹிட் நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு அயலான் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் தனுஷ் திரைப்படமான கேப்டன் மில்லரோடு மோதி குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் மீது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை இசையமைப்பாளர் டி. இமான் முன் வைத்தார். அதாவது இமான் தனது சிறு வயதில் இருந்து இசையில் அதிகம் ஆட்டம் கொண்டு இசையமைப்பாளராக மாறி அதிக ஹிட் கொடுக்கும் இசையமைப்பாளராக வளர்ந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவைகள் இருந்து தொடங்கியது சிவகார்த்திகேயன் மற்றும் டி இமானின் கூட்டணி பயணம்.
மனம் கொத்தி பறவை தொடங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமா ராஜா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை என்று தொடர்ச்சியாக பக்கா என்டர்டைன்மென்ட் படங்கள் முழுவதிலும் டி இமான் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி தொடர்ந்து வந்தது சிவகார்த்திகேயன் படத்தில் டி. இமான் இசையமைத்தாலே அந்த படம் வெற்றிதான் அந்த படத்தின் வரும் பாடல்கள் முழுநிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு இருவரது கூட்டணியில் எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்தது, அந்த நிலையில் டி இமான் மற்றும் அவரது மனைவிக்கு இடையே விவாகரத்து நடந்தது. இந்த நிலையில் ஒரு தனியார் youtube சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்த இமான் சிவகார்த்திகேயனை குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார், அதாவது சிவகார்த்திகேயனுடன் இனி இணைந்து பணியாற்ற மாட்டேன் அவர் செய்த ஒரு துரோகம் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயனுடன் இனி வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு படத்திலும் இணைய மாட்டேன் என்று கூறியது கோலிவுட் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் அப்படி என்ன துரோகத்தை இமானுக்கு செய்தார் என்ற ஒரு கேள்வியும் முன்வைக்கப்பட்டு இசையமைப்பாளரும் இது குறித்து தெளிவாக கூறாமல் இருந்ததால் பல சந்தேகங்கள் மற்றும் வதந்திகள் பரவுவதற்கு காரணமாக அமைந்தது, அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இமானின் முதல் மனைவியான மோனிகா முன்வைத்த கருத்துக்களும் தமிழ் திரையுலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது இருப்பினும் இது குறித்து எந்த ஒரு கருத்தையும் சிவகார்த்திகேயன் தன் தரப்பில் முன்வைக்காமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாரிமுத்து சிவகார்த்திகேயனை குறித்து மற்றுமொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதாவது youtube நேர்காலில் கலந்து கொண்டுள்ள மாரிமுத்து, சிவகார்த்திகேயன் எனக்கு விஜய் டிவியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பராக இருந்தவர் ஒருமுறை அவரை சந்தித்த பொழுது பட வாய்ப்பு குறித்து கேட்டிருந்தேன், அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து அவரது மேனேஜர் மூலம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் அனுப்பி வைத்திருந்தார் ஆனால் நான் அதை மறுத்து விட்டு சிவகார்த்திகேயனை என்னை அழைக்க கூறியிருந்தேன் ஆனால் இதுவரை சிவகார்த்திகேயன் என்னை அழைக்கவும் இல்லை என்னிடம் பேசவும் இல்லை என்று கூறியது தற்போது இணையங்களில் வைரலாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் அயலான் படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்தார் சிவகார்த்திகேயன் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதெல்லாம் ஒன்றும் இல்லை நல்லா பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டுதான் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என்ற உண்மையும் தற்பொழுது கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.