திமுக போட்டு இருந்த அரசியல் கணக்கு தற்போது மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மனதில் இருக்கும் கருத்தை வெளிப்படையாக கொட்டி தீர்த்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக தகர்ந்து இருக்கிறது, இன்னும் சொல்ல போனால் அண்ணாமலை ஒரு விவசாயி நானும் ஒரு விவசாயி என சொன்னவர் இறுதியில் சொன்ன திமுக குறித்த வார்த்தை தான் தற்போது ஆளும் கட்சியான திமுகவை அதிர செய்து இருக்கிறது.
அண்ணாமலை நடை பயணம் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என திமுக அரசியல் கணக்கு போட்டு இருந்த நேரத்தில் கடை கோடி கிராமமான சோழவந்தாணில் அண்ணாமலை மிக பெரிய அரசியல் மாற்றத்தை உண்டாக்குவார் என விவசாயி ஒருவர் தனது கருத்தை தெரிவித்து இருப்பதுடன் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என பத்திரிகையாளர் கேட்க அதற்கு மிகவும் மோசமாக இருக்கு சார் சொன்னது எதையும் செய்றது இல்லை என ஒரு அழுத்தமாக தனக்கு தெரிந்த பாஷையில் வெளுத்து எடுத்து இருக்கிறார்.