அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற பயணம் மிக பெரிய அரசியல் அதிர்வலைகளை நாளுக்கு நாள் உண்டாக்கி வரும் வேலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலையை சந்தித்து பெண் கொடுத்த மனு வீதியில் கிடந்ததாக செய்திகள் வெளியானது.
அதனை தொடர்ந்து திமுகவினர் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அண்ணாமலை யாத்திரையை விமர்சனம் செய்தனர், இது ஒருபுறம் என்றால் கவன குறைவாக நடந்த சம்பவம் இது இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும் திமுகவினர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் அதே பெண் பாஜக நிர்வாகிகளை சந்தித்த போது பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது இந்த விஷயத்தில் நான் பேசிய முழுமையான கருத்துக்களை ஊடகங்கள் சொல்லவில்லை மாறாக சில தகவல்களை வெட்டி பரப்பு கின்றனர் நான் பாஜக மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன் முதலில் சாதாரண நிகழ்வாக நினைத்து நானும் கருத்து சொன்னேன் அதன் பிறகுதான் இதன் பின்னணியில் திமுக இருப்பது தெரியவந்தது.
மொத்தத்தில் இப்போது இருக்கும் நிலையில் திமுக செய்த செயலால் தான் இந்த நிலை உண்டாகி இருப்பதை உணர்ந்து இருப்பதாக கூறி இருக்கிறார். ரமா கூறும் இந்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெண் மனு கொடுத்ததை திமுக போட்ட கணக்கு இரண்டு நாட்களில் சுக்கு நூறாக உடைந்து இருக்கிறது.