தற்போது மோசடி வழக்கால் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை என்ற இரண்டு பெருந்துறைகளை தன் வசமாக வைத்திருந்தார். இவர் மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் டாஸ்மாக்கில் பல ஊழல்கள் மோசடிகள் ஏன் நேரடியாகவே மது பிரியர்களிடம் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று புகார் அளித்தனர்.
இதற்கு பின்னனியில் யார் என்று பார்த்தால் கரூர் கேங் என்று கூறப்படுகின்ற அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் சம்பந்தப்பட்ட கும்பல் இருப்பதாக கூறப்பட்டது இதைப் பற்றி செந்தில் பாலாஜி இடமும் பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுதும் கோபமடைந்து சமாளிக்கவே செய்தார்! அதற்கு பிறகு ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் சில பிரச்சனைகள் மற்றும் பல புகார்கள் எழுந்து. இப்படி எழுந்த புகார்கள் சமூக வலைதளங்களில் பரவ அதனாலேயே வருமானவரித்துறை செந்தில் பாலாஜி மீது சோதனைகளில் ஈடுபட்டது அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை போட, தற்போது நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து புழல் சிறையில் அமலாக்கத் துறையின் பிடியில் இருக்கிறார். டாஸ்மாக் துறையால் செந்தில் பாலாஜி மட்டும் பின்னாடைவை சந்திக்கவில்லை திமுக அரசும் பெரும் பின்னடைவை சந்தித்து.
இதற்குப் பிறகு செந்தில் பாலாஜியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் அவரிடம் இருந்த இரண்டு பொறுப்புகளும் இரு வேறு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது அதன்படி மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக தற்போது முத்துசாமி இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற சில தினங்களிலே டாஸ்மாக் துறைகளில் எந்த ஒரு முறைகேடும் நடக்கக்கூடாது தமிழக அரசுக்கு டாஸ்மார்க் எந்த பின்னடைவும் இனி ஏற்படக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு அத்துறையில் எழுந்த அனைத்து புகார்களையும் உடனடியாக தீர்த்ததோடு இனி எந்த புகாரும் ஏற்படக்கூடாது ஏற்பட்டால் உடனடியாக டிப்ஸ்மிஸ் தான் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் சில கடைகளில் மதுபாட்டில்கள் அரசு நிர்ணயித்த விலையிலேயே விற்கப்படும் என்ற வாக்கியங்கள் நிரம்பிய போர்டுகள் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில தினங்களுக்கு முன்பு இன்னும் சில டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் வசூலிக்கப்படுவதாகவும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த அரசின் ஆணையை சில கடைகள் ஏற்காமல் ரொக்கத்திலேயே பணத்தை செலுத்தும்படியாக கூறுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து டாஸ்மார்க் துறையில் அனைத்து பரிவர்த்தனைகளும் இனி கணினி மயமாகவே இருக்கும் என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் 2444 டாஸ்மார்க் கடைகளில் பணியாற்றியவர்களை இடமாற்றுதல் செய்துள்ளனர். இவர்களை டிரான்ஸ்ஃப்ர் செய்ததில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு அதற்குப் பிறகு இவர்களது பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு ஒரு ரூபாய் கூட அரசின் தரப்பில் வாங்கப்படவில்லை இவை அனைத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைமையில் அமைச்சர் முத்துசாமி மேற்கொண்டு உள்ளார் என்று செய்திகளில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக அரசு மற்றும் அரசு தரப்பு சார்ந்த பணிகளில் எல்லாம் பணியிடை மாறுதல் என்றால் சில பல லட்சங்கள் விளையாடும், ஆனால் டாஸ்மாக் துறையைப் பொறுத்தவரையில் மேலும் ஏதாவது ஒரு குறை அல்லது புகார் எழுந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து என்பதால் இந்த முறை டாஸ்மாக் துறையில் எந்த குறையும் ஏற்படக்கூடாது என்று அமைச்சர் உதயநிதி உறுதியாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது பணியாளர்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்கப்படாமல் பணியிடை மாற்றங்கள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.