24 special

விஜயை அசிங்கப்படுத்திய தந்தை.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு!

Chandrasekar, Vijay
Chandrasekar, Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் தளபதி விஜய், தபோது சினிமாவில் இருந்து அரசியல் கவனம் செலுத்தி வரும் விஜய் கட்சியை பதிவு செய்து பொறுப்பாளர்கள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலமாக சினிமாவால் கால் பதித்தவர் நடிகர் விஜய் ஆரம்பத்தில் பல கஷ்டங்களை கடந்து தற்போது மிக பெரிய வளர்ச்சியை கொண்டுள்ளார் விஜய். இவரை குறித்து அவரது தந்தை சமீபத்திய நிகழ்ச்சியில் துள்ளாத மனமும் துள்ளும், துப்பாக்கி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்து விஜயை திட்டியுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்து வரும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் படம் வெளியானது. ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்தியதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக 545 கோடி வசூல் என அறிவித்தது. இது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. லியோ படம் முதல் பாதி பெரியதாக பேசப்பட்டாலும் இரண்டாம் பாதி சுமாராகவே இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டாம் பாதி மொத்தமாக லோகேஷ் கனகராஜ் உருட்டி வைத்து விட்டார் என பேசப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குனரும் நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர்  கலந்துகொண்டு பேசினார். 'ஒரு படத்தைப் பார்த்தேன் அதன் முதல் பாதியை பார்த்துவிட்டு மிகவும் பிடித்து போனது. அந்த இயக்குனருக்கு போன் செய்து ஒரு படம்னா இப்படித்தான் இருக்கணும் என முதல் பாதி குறித்து பாராட்டினேன் அவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதன் பின்னர், இரண்டாம் பாதியில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினேன். அந்த குறிப்பிட்ட மதத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகள் இல்லை என்றும் கூறினேன்.

உடனடியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் சார் பிறகு போன் செய்கிறேன் என வைத்துவிட்டார்.  இந்த காலத்து இயக்குனர்கள் தாங்கள் எடுப்பதுதான் சரியான படம் என நினைக்கின்றனர். சரியான விமர்சனங்களை கூட காது கொடுத்து கேட்பது கிடையாது. படம் வெளியான பின்னர், நான் சொன்ன அதே விமர்சனத்தை கிட்டத்தட்ட அனைவருமே கூறினர்'. ஒரு ஹீரோவை காட்டினால் எப்படி காட்ட வேண்டும் எம்ஜிஆர் நடிக்கும் போது அவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும் சினிமாவில் தண்ணி அடிக்காத வராக தன்னைக் காட்டுவார். ஆனால் இங்கு ஹீரோ படம் முழுக்க குடித்துக் கொண்டே இருப்பதாக காட்டுகின்றனர் என விஜய்யின் மாஸ்டர் படத்தையும் கதாபாத்திரத்தையும் மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார். 

சினிமாவில் ரஜினிகாந்த், விஜயகாந்த் என பல நடிகர்களை வளர்த்து விட்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இவர் தற்போது தனது மகன் குறித்து பேசியது இணயத்தில் வைரலாகி வருகிறது. அப்பாவே மகனை குறை சொல்கிற அளவுக்கு விஜய் இறங்கிவிட்டாரா? என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே விஜய் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனித்து வாழ்ந்து வருகிறார். விஜய்க்கு சினிமாவில் பக்கம் பலமாக இருந்தவர் இப்போது அரசியலுக்கு வருகிறார் என்றதும் இப்படி பேசுவது சரியில்லை ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ரசினிமா வட்டாரத்தில் முணுமுணுக்க படுகிறது.