24 special

கவடினா சிலுவையா வெளியான பகிர் வீடியோ!

p.m.modi,nirmalasitharaman
p.m.modi,nirmalasitharaman

திடீர் திடீரென்று சமூக வலைதளத்தில் புது விதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கமாகி வருகிறது அந்த வகையில் அரசியலில் மிக முக்கிய புள்ளி யாரேனும் ஒரு கருத்தை கூறினால் அது வைரலாகும் அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் ஏதாவது கூறினார் அதுவும் வைரலாகும் மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அதுவும் வைரலாகும் அது குறித்த வீடியோக்களும் வரலாம் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் பரவினாலும் வைரலாகும், அதே சமயத்தில் சிறு குழந்தைகள் விலங்குகள் இயற்கை என்று எந்த ஒரு அழகான வீடியோ வெளியிடப்பட்டாலும் அதுவும் வைரலாகும் இப்படி இருந்து வரும் நிலையில், கிறிஸ்தவ சமயத்தில் மேற்கொள்ளப்படும் ஆலய வழிபாடுகள் மற்றும் ஜெப கூட்டங்கள் குறித்த வீடியோக்களும் தற்பொழுது வைரலாகி வருகிறது, ஏனென்றால் சில ஜெப கூட்டங்கள் தற்பொழுது பிரச்சார கூட்டங்கள் போன்று மாறி வருகிறது! அதோடு பலர் உற்சாகமாக திடீரென்று எழுந்த ஆடும் அளவிற்கு தன்னை மறந்து வேறு மொழியில் பேசும் வகையிலும் ஜெப கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வீடியோக்கள் பலரால் பகிரப்பட்டு அதை காமெடி வீடியோக்களாக மாற்றியும் சமூக வலைதளத்தில் டிரென்டாக்கி வருகின்றனர் சிலர்! 


மேலும் ஓங்கி கத்திக்கொண்டு இறைவனை நோக்கி ஜெப கூட்டங்களில் கிறிஸ்தவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் அவர்கள் கடவுளை நோக்கி முன் வைக்கும் கோரிக்கைகள் என அனைத்துமே தற்போது பேசுபொருளாக சமூக வலைதளத்தில் மாறி உள்ளது. சமீபத்தில் கூட ஒரு ஜெப கூட்டத்தில் பிரதமர் மோடி,. அமித்ஷா, நிர்மலா சீத்ராமன் போன்றவர்களை ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு ஜெப ஆலயத்தில் ஜெப கூட்டம் நடைபெற்றது பல காமெடி வீடியோக்களாக மாற்றப்பட்டது வைரலும் ஆனது! இந்த நிலையில் இதே போன்று மற்றொரு வீடியோவும் தற்பொழுது வைரல் ஆகியுள்ளது. 

அந்த வீடியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த தைப்பூச திருநாளில் பக்தர்கள் அனைவரும் முருகனை நோக்கி காவடி ஏந்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஆனால் அப்படி காவடி ஏந்தி செல்வதே சிலுவையை ஏந்தி செல்வதற்கு சமமானது என்று ஒரு ஜெபக்கூட்டத்தில் ஆலயத்தை சேர்ந்த ஒருவர் பேசியுள்ளார். 

அதில், அங்கு ஏசுபெருமான் செல்வதற்கு சிலுவை மரம் இருந்தது! அதற்குப் பெயர் காவு தடி அதனை தற்போது தூக்கிக்கொண்டு பழனி மற்றும் திருத்தணிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர், குறுக்கு தடியை தூக்கிக்கொண்டு மழையை நோக்கி அவன் ஏன் செய்கிறான்? எதற்காக காவி உடுத்திக் கொண்டும் செல்கிறான்? சிலுவையிலே அறையப்படுகின்ற ஒருவனுக்கு அவன் சிலுவையில் அறையப்பட உள்ளான் என்று தீர்ப்பு வந்தவுடன் அவன் அணிந்திருந்த ஆடையை கலைத்துவிட்டு சிவப்பு நிறைந்த காவி ஆடையை உடுத்திக் கொள்ளுவான், அதை உடுத்திக்கொண்டு சிலுவையை தூக்கிக் கொள்ள மாட்டான் குறுக்கு தடியை தான் ஏந்தி கொண்டு சென்று மலை மீது உச்சியில் சிலுவையில் அறையப்படுவான் அதுதான் இயேசு கிறிஸ்து! 

அப்படியே இயேசு கிறிஸ்து மரணம் அடைந்ததை இப்பொழுது உள்ள சாமானிய மக்கள் காவடி எடுத்து அலகு குத்தி தன் உடலை வருத்திக் கொண்டு, அன்று இயேசு கிறிஸ்து என்னை மீட்பதற்காக அந்தப் பாடுகளை எல்லாம் அடைந்தார் அதனை நினைவுகூர்ந்து நானும் அவரை போன்று பாடுபட்டு அவர் அணிந்திருந்த காவியுடை அணிந்து அவன் மலையை நோக்கி செல்கிறான் என்று அந்த ஜெபக்கூட்டத்தில் பேசுபவர் கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளதால் இந்த வீடியோவில் பேசியவர் மீது நடவைடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.