மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டில் இருந்து யார் நன்கொடை கொடுத்தார்கள் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும் என NGO களுக்கு உத்தரவிட்ட நிலையில் பல NGO கள் தங்கள் கணக்கை புதுப்பிக்க முடியாமல் மூடிவிட்டன இந்த நிலையில் அரசியல் திறன் ஆய்வாளர் ராஜசங்கர் விஸ்வநாதன் ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-
இந்த என்ஜிஓக்கள் வெளிநாட்டு நிதி வாங்க தடை என படிச்சுருப்போம் அதிலே உண்மை என்ன தெரியுமா? அந்த ஆறாயிரம் என்ஜிஓக்களும் தாமாக முன்வந்து வெளிநாட்டிலே இருந்து பணம் வாங்கவில்லை என சொல்லிவிட்டார்களாம். மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வளவு பணம் வருதுன்னு மட்டும் கணக்கு கேக்காம யாரு கொடுக்கறா? எந்த வங்கி கணக்கு? அவங்களோட அடையாளம் என்ன பின்புலம் என்ன என விவரம் கேட்டதுக்கு, நாங்க வெளிநாட்டிலே பணம் வாங்காம இருந்துக்கறோம் கணக்கு மட்டும் கேக்காதீங்க என சொல்லி வெளிநாட்டு நிதிவாங்கும் உரிமையை வேண்டாம் என தாமாக முன்வந்து விட்டுக்கொடுத்துட்டாங்களாம்.
கணக்கு மட்டும் காட்டினால் போதாது யாரிடம் இருந்து பணம் வருகிறது எங்கிருந்து பணம் வருகிறது எவ்வளவு வருகிறது அந்த பணம் கொடுப்பதிலே யார் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் காட்டவேண்டும் என சொன்னவுடனே பணம் வாங்கவில்லை என்று சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஏதோ ஒரு சில மத மாற்றம் செய்யும் என் ஜி ஓக்கள் மட்டும் செய்யவில்லை. நாம் இது வரை நல்லது செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த என் ஜி ஓக்களும் இப்படி சொல்லியிருக்கிறார்கள். சுற்றுப்புற சூழலை காக்கும் அமைப்பு, மருத்துவ சேவை அமைப்புன்னு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சோ கால்டு நடுநிலை சேவை அப்பம் அமைப்புகளும் சொல்லியிருக்கின்றன.
ஏழு வருசம் ஆகி ஏன் இப்ப தீடிர்ன்னா முன்னாடி கணக்குகளை இணைத்து எங்கே கோல்மால் பண்ணுகிறார்கள் என பார்க்க தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தன. என்.ஜி.ஓ.க்களும் ஜப்பான்ல சாக்கிசான் குடுத்தாக அமெரிக்காவிலே மைக்கேல் ஜாக்சன் குடுத்தாக என ஊருக்கு ஊர் வங்கி கணக்கு வச்சு இஷ்டத்துக்கும் கணக்கு எழுதிக்கொண்டிருந்தன. போன பட்ஜெடில் பல மாற்றங்களை இதிலே கொண்டுவந்தார்கள் அதிலே முக்கியமானது ஒரு என் ஜி ஓவுக்கு வரும் பணத்தை அதே என் ஜி ஓ தான் செலவு செய்யவேண்டும் மற்ற என் ஜி ஓவுக்கு பிரிச்சு கொடுப்பது எல்லாம் கூடாது என இவர்கள் முன்னாடி ஒருத்தன் எப்படியோ காசு வாங்கி அதை உள்ளே பிரிச்சு கொடுத்து வேணுங்கிறத செஞ்சுட்டு இருந்தானுக அதுக்கு தடை போட்டாங்க.
அடுத்தது ஆதார் கார்டு. என் ஜி ஓ நடத்தும் அனைவரும் அதிலே பதவியிலே இருக்கும் அனைவரும் ஆதார் கார்டு காட்டனும் என வைச்சவுடனே பெரும்பாலானோர் காட்ட விரும்பல. எங்களுக்கு லைசென்ஸு வேண்டாம் என ஒதுங்கிட்டாங்க. பல வங்கி கணக்குகளுக்கு பதிலே டெல்லியிலே இருக்கும் பாரத வங்கியிலே தான் கணக்கு வைக்கனும் என சொன்னதோட இந்த என்.ஜி.ஓக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 12,000 என் ஜி ஓக்கள் தங்களோட உரிமம் வேண்டாம் என விட்டிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க. அம்புட்டு யோக்கியனுகன்னா கேட்ட தகவலை கொடுக்கவேண்டியது தான்.
இதே 2014 இல் மோடி அரசு அமைந்தவுடனேயே போர்டு பவுண்டேசனை இங்கே பதிவு செய்ய சொன்னதுக்கு எம்புட்டு குதி குதிச்சது ஞாபகம் இருக்கா? .அமெரிக்க டெமாகிராட்டிக் கட்சி தலைமை வரைக்கும் விஷயத்தை எடுத்துட்டு போய் லாபி செஞ்சது இப்போ எங்கே போச்சு? மோடி அரசு கையிலே அனைத்து தகவலும் திரட்டப்பட்டிருக்கு முன்னாடி போல் இல்லாமல் தகவல்களை ஒருங்கிணைத்து பார்க்கும் அமைப்பும் இருக்கு. இன்னும் மிச்சம் மீதி இருக்கறதையும் களை எடுத்துட்டா போதும் என குறிப்பிட்டுள்ளார் ராஜசங்கர் விஸ்வநாதன்.