24 special

மாறியது திரையுலகம்! முதல்முறையாக மனம் திறந்த அர்ஜுன்!

actor arjun, pmmodi
actor arjun, pmmodi

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மாநில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான திரையுலக பிரபலங்களை இதுவரை இருந்துள்ளனர். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி எம் பியும் திமுக நிர்வாகியுமான கனிமொழி ஹிந்தி தெரியாமல் விமான நிலையத்தில் அவமரியாதை செய்யப்பட்டதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி தெரியாது போல என்ற வகையில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனென்றால் இதே போன்ற ஒரு சம்பவம் இயக்குனர் ஒருவருக்கு நிகழ்ந்ததாகவும் அதனை கண்டித்து திரை உலக பிரபலங்கள் அனைவரும் இந்து தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கியதோடு ஹிந்தி தெரியாது போல என்ற வாக்கியங்கள் அடங்கிய டி-ஷர்ட்களையும் வாங்கி அணிந்து அதனை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அதற்குப் பிறகு இந்த விவகாரம் அமைதியான நிலையில் மீண்டும் உதயநிதி இதுபோன்ற கருத்தை பதிவிட்டது ஹிந்தி தெரியாது போடா என்ற சர்ச்சையை வலுவெடுக்க வைத்தது.


அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு முன்பு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் படங்களை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் போராளிகளாக உருவெடுத்திருந்தனர். அதிலும் குறிப்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கண்டனங்கள் சினிமா வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் திரை உலகில் எடுக்கப்பட்ட முக்கிய படங்கள் அனைத்துமே சமூகப் பிரச்சனைகளை எதிர்த்தும் அரசியல் கருத்துக்களை கூறியும் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் என்றும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இருந்து திரைப்பட போராளிகள் ஒருவரையும் திரைப்படங்களை தவிர்த்து வேறு எங்கும் பார்க்க முடியவில்லை! கடந்த ஆட்சி காலத்தை விட தற்போதைய ஆட்சி காலத்தில் அதிக அளவிலான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தனர் பிரச்சனைகளும் மக்களுக்கு வந்து கொண்டே இருந்தது ஆனால் அதில் எதற்குமே சினிமா வட்டாரங்கள் தரப்பில் ஆதரவுகள் முன்வைக்கப்படாமல் இருந்தது அரசியல் வட்டாரங்களை தவிர்த்து மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனால் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் திரையுலக வட்டாரங்களை முன்வைக்கப்படுவதும் குறைக்கப்பட்டது! மேலும் பிரதமரை பிடிக்காமலும் அதிக இடதுசாரிகள் தமிழ் சினிமா வட்டாரங்களில் இருந்த நிலை தற்பொழுது மாறிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. அதாவது தமிழகத்திற்கு நேற்று வருகை புரிந்த பிரதமரை நேரில் பார்க்க சென்ற நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய அர்ஜுன் பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பிடிக்கும் அதனால் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் தற்பொழுது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் வந்து பார்த்தோம் மேலும் எனது கோவிலுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டேன் அவரும் வருகிறேன் என்று கூறியிருக்கிறார் என தெரிவித்தார். திரையுலகத்திலிருந்து முதல் முறையாக நடிகர் ஒருவர் இப்படி பிரதமரை பிடிக்கும் என்று கூறி இருப்பது திரை உலகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இதேபோன்று தமிழக முழுவதும் நிலை மாறிவிட்டது இனி மோடியை பிடிக்கும் என்றும் குறிப்பாக திமுக ஆதரவு நிலைப்பாட்டை நடிகர்கள் எடுக்கமாட்டார்கள் என்றும் வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.