
இன்றைய சினிமா உலகில் சார்ந்தவர்களை தவிர சின்னத்திரை நடிகை நடிகர்கள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் தொகுப்பாளர்கள் பலர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும் பெற்று வருகின்றனர். இவர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியின் முக்கிய நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா பல ரசிகர்களை கொண்டவர் அவருடைய நேர்த்தியான பேச்சு மற்றும் கமெண்ட்கள் அனைத்தும் பலரை மகிழ வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் 5விலும் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா அந்த நிகழ்ச்சியிலும் தன் பங்கை முழுமையாக காட்டி மக்கள் அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் அந்த சீசனில் பிரியங்கா செய்த காமெடிகள் ஒவ்வொன்றும் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. Instagram மற்றும் youtube சேனலில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா எப்பொழுதுமே தனது குடும்பத்தை பற்றி அதிக அளவில் பேசி வருவார்.
ஆனால் தனது கணவரை குறித்த எந்த ஒரு கருத்தையும் இதுவரை அவர் பதிவிடாமல் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 ஆம் ஆண்டு பிரியங்கா பணியாற்றி வரும் அதே விஜய் டிவியில் பிரபலமானவராக இருந்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா திருமணமான சில மாதங்களில் தனது கணவரை குறித்து அதிக பதிவுகளை பதிவிட்டு வந்தார். ஆனால் காலப்போக்கில் இது குறை ஆரம்பித்ததோடு தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது! பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கூட அவரது கணவர் வராதது என்ன ஆயிற்று பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்து விட்டாரா என்று கேள்விகளுக்கு காரணமாக அமைந்தது. அதே சமயத்தில் அந்த நிகழ்ச்சி மட்டுமின்றி மற்ற எந்த இடங்களிலும் பிரியங்கா தனது கணவரை குறித்து எதுவும் பேசாமல் தவிர்த்தே வருகிறார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியங்காவின் 15 வருட காலம் தொகுப்பாளனியாக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட பயணத்தை சிறப்பிக்கும் வகையில் அவர் பணியாற்றும் தனியார் நிகழ்ச்சியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது அந்த விழாவிலும் பிரியங்காவின் தாயார் அவரது திருமண வாழ்க்கையை பற்றி பேசியதும் தற்போது வைரலாகி வருகிறது. அதோடு பிரியங்கா தனது ஆரம்பத்தில் பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பிரியங்கா கணவர் தன்னை வெளியில் எந்த இடத்திற்கும் அழைத்துச் செல்வதில்லை என்றும் வார இறுதி நாட்களில் தன்னுடைய நண்பர்களோடு சென்று மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றும்! இந்த ஆண்களுக்கு என்னதான் ஸ்டேட்டஸ் என்றே தெரியல எப்ப பாத்தாலும் தன்னுடைய பிரெண்ட்ஸ் கூடயே சுத்திக்கிட்டு இருக்காங்க அவங்க கூட போறது தான் சந்தோஷமா இருக்குன்னு பேசிகிட்டு இருக்காங்க எப்பயாவது பொண்டாட்டிய கூட்டிட்டு வெளியே போகணும் அப்படின்னு நினைக்க மாட்டாங்க நாம ஊருக்கு போயிட்டா கூட என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா அப்படின்னு குரூப்ல மெசேஜ் போடுவாங்க அந்த குரூப்ல நாம இருக்கிறோம் அப்படிங்கறதையும் மறந்துட்டு! என்று பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி பிரியங்காவின் 15 வருட பயணத்தை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்காவின் தாயார், பிரியங்கா தன்னுடைய வாழ்க்கையில் இதற்கு முன்பு செய்த தவறை போன்று இனி செய்யக்கூடாது அவர் சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் அந்த வாழ்க்கையிலும் பிரியங்கா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார், இதன் மூலம் பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்து விட்டார் என்பது உறுதியாக இருப்பதாகவும் பலர் தனது சோகத்தை மறந்து சிரிப்பதற்கு காரணமாக இருககும் பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.